districts

img

வளர்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை, டிச.21- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மற்றும் திரு வரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.1.49 கோடி  மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.143 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்து சுற்றுச்சூழல்துறை அமைச்  சர் சிவ.வீ.மெய்யநான் பேசுகையில், “முதலமைச்சரின் 10 அம்ச கோரிக்கையின்படி, முதல் கோரிக்கையாக காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்துடன் இப்பகுதியில் உள்ள அம்புலியாறு, அக்னியாறு, வெள்ளாறுகளை இணைப்பது குறித்தும், கொத்தமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள் ளன. ஆலங்குடியில் கலை மற்றும் அறிவியல் கல்லூ ரிக்கான புதிய கட்டடங்கள் விரைவில் கட்டப்பட்டு பயன்  பாட்டிற்கு கொண்டு வரப்படும்” என்றார். பின்னர், திருவரங்குளம் ஒன்றியம், சூரன்விடுதி கிரா மத்திற்குட்பட்ட பகுதிகளில் நிலவும் குறைந்த மின் அழுத்தத்தை சரி செய்யும் வகையில், ரூ.6,35,350 லட்சம்  செலவில் புதிய மின்மாற்றியினை துவக்கி வைத்தார்.  மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, கோட்டாட்சி யர்கள் முருகேசன் (புதுக்கோட்டை), சு.சொர்ணராஜ் (அறந்தாங்கி) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;