districts

img

கிராம நிர்வாக அலுவலகத்தை திறக்க மக்கள் கோரிக்கை

திருவள்ளூர், மார்ச் 1- மேல்முதலம்பேடு கிராம நிர்வாக அலுவலகத்தை திறந்து,  அதிகாரிகள்  பணி யாற்ற மாவட்ட ஆட்சியர் நட வடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்மிடிபூண்டி அருகி லுள்ள மேல்முதலம்பேடு ஊராட்சியில் இரண்டா யிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர் இங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் சாதாரண விவசாயக் கூலி களாக உள்ளனர். இவர்க ளுக்கு முதியோர் உதவித் தொகை, சிட்டா, சாதி சான்றி தழ் போன்ற பல்வேறு தேவை களுக்காக கிராம நிர்வாக அலுவலரை பார்த்து சான்றி தழ்கள் பெற வந்தால் அலுவலகம் எப்போதும் பூட்டியே கிடப்பதாக கூறப் படுகிறது. இதனால் ஏழை கள், மூத்தகுடி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பயிர்களுக்கான நிவா ரண உதவி தொகையை, தங்களுக்கு வேண்டியவர் களுக்கு மட்டும் வருவாய்த் துறை அதிகாரிகள் வழங்கு கின்றனர். நிலமே இல்லாத வர்களுக்கு கூட பயிர்க்காப் பீடு தொகை வழங்கி யுள்ளதாக கூறப்படுகிறது. ஊராட்சியில் இருப்பதே 500 ஏக்கர் தான். ஆனால் 700 ஏக்கருக்கு காப்பீடு செய்துள்ளதாக தெரிகிறது.இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்மி டிப்பூண்டி வட்ட குழு  உறுப்பினர் எம்.சி.சீனு  கூறுகையில், மேல்முதலம் பேடு ஊராட்சியில் உள்ள  கிராம நிர்வாக அலுவகம்   கடந்த இரண்டு ஆண்டு களாக திறக்கப்படவில்லை. விஏஒ- கிராமத்திற்கு வருவ தேயில்லை. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட பயிர்களுக்கு காப்பீடு வழங்குவதில் ஏராள மான முறை கேடுகள் நடை பெற்றுள்ளது, இதனை விசாரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

;