districts

img

தச்சூர் - சித்துர் 6 வழிச்சாலையை மாற்றுப்பாதையில் அமைத்திடுக! தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாடு வலியுறுத்தல்

திருவள்ளூர், ஜூலை 24- தச்சூர்-சித்தூர் இடையி லான 6வழிச்சாலையை மாற்றுப்பாதையில் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் 8வது மாவட்ட மாநாடு கும்மிடிப் பூண்டியில் ஞாயிறன்று (ஜூலை 24) நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் ஜி.சம்பத் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பி.கருணாமூர்த்தி கொடியேற்றினார். மாவட்ட துணைத் தலை வர் பி.ரவி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வட்டார தலைவர் எம்.ரவிக்குமார் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் பி.டில்லிபாபு மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச்செயலாளர் பி.துளசிநாராயணன் வேலை அறிக்கையையும், பொருளாளர் சி.பெருமாள் வரவு செலவு கணக்கையும் சமர்ப்பித்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அ.து.கோதண்டன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநில பொருளாளர் கே. பி.பெருமாள் நிறைவுரை யற்றினர். வட்டார செய லாளர் எம்.சிவகுமார் நன்றி கூறினார்.
நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக பி.துளசிநாராயணன், செயலாளராக ஜி.சம்பத், பொருளாளராக சி.பெரு மாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானங்கள்
நெல் கொள்முதல் நிலையங்களில் நடைமுறை யில் இருக்கின்ற முறைகேடு களை தடுப்பதோடு, கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும், பழங்குடி இன மக்களுக்கு குடிமனை பட்டா, இனச் சான்றிதழ் வழங்க வேண்டும், திருத் தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை நவீனப்படுத்தி, எத்தனால் உற்பத்தி நிலை யத்துடன் கூடிய இணை மின் உற்பத்தி நிலையம் அமைக்க வேண்டும். சோழவரம் ஒன்றி யத்தில் அருமந்தை, முல்லைவாயல், ஞாயிறு ஆகிய ஊராட்சிகளில் மலட்டு விதை நெல்லால் பாதிக்கப்பட்ட விவ சாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மலட்டு விதையை உற்பத்தி செய்த கார்ப்பரேட் முதலாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொண்டா ரெட்டிஸ், வேட்டைக்காரன், காட்டுநாயக்கன், நரிக்குற வர், மலைகுறவர் ஆகி யோருக்கு பழங்குடியினர் இனச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

;