districts

img

கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்துக மாதர் சங்க திருவள்ளூர் மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

திருவள்ளூர், ஜூலை 19- திருவள்ளூர் மாவட்டத்  தில் பரவலாக கஞ்சா விற்பனை நடைபெறுவதை முற்றிலும் தடுக்க  வேண்டும் என மாதர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட மாநாடு வலியுறுத்தி யுள்ளது. அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் திரு வள்ளூர் மாவட்ட மாநாடு செவ்வாயன்று (ஜூலை 19)  சோழவரத்தில் மைதிலி  சிவராமன் நினைவரங் கத்தில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.ரமா தலைமை தாங்கினார்.மாவட்ட துணைச் செயலாளர் எம்.ரமணி கொடியேற்றினார்.ஞாயிறு ஊராட்சி மன்ற தலைவர் ஜி.வி.எல்லையன் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் என்.கீதா  அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா  மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.  மாவட்டச் செயலாளர் இ.மோ கனா வேலை அறிக்கையை முன்மொழிந்தார். பொருளாளர் பி.பத்மா வரவு செலவு  அறிக்கையை சமர்ப்பித்தார். வாலிபர் சங்க  மாவட்டச் செயலாளர் எஸ்.தேவேந்திரன், பொன்னேரி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அனுரத்னா, இந்திய மாண வர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜெ.த.வசந்த் பௌத்தா ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எம்.மகாலட்சுமி மாநாட்டை நிறைவு செய்து பேசினார். சோழவரம் ஒன்றிய செயலாளர் கே.ருக் குமணி நன்றி கூறினார்.

புதிய நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக இ.மோகனா, மாவட்டச் செயலாளராக பி.பத்மா, பொருளாளராக பி.சசிகலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானங்கள்
புதிய வேலைவாய்ப்பு களை உருவாக்க வேண்டும், பூந்தமல்லியில் பாதாள சாக்கடை திட்டத்தை அம லாக்க வேண்டும், அரசு  மதுக்கடைகளின் எண்ணிக் கையை குறைக்க வேண் டும், நூறு நாள் வேலைக்கு காலை 6 மணிக்கு பணிக்கு செல்ல வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும், திமுக அரசு தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள குடும்ப உரிமை தொகையை உடன டியாக வழங்க வேண்டும்  உள்ளிட்ட பல தீர்மானங் கள் மாநாட்டில் நிறை வேற்றப்பட்டன.

;