districts

img

பழவேற்காடு மீன்பிடித் துறைமுகம் அமையும் இடத்தை மாற்றக் கோரிக்கை

திருவள்ளூர், ஜூலை 8- திருவள்ளூர் மாவட்டம் பழ வேற்காட்டில் 16 குப்பங்களைச் சேர்ந்த சுமார் 25 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மீன்பிடி தொழி லுக்காக கடலுக்கு சென்று விட்டு முகத்துவாரம் வழியாக கரை திரும்பும் படகுகள் தங்களது படகுகளை மீன வர்கள் பல ஆண்டுகளாக உப்பங்கழி  ஏரிக்கரையில் நிறுத்தி வரு கின்றனர். காமராஜர் துறைமுகம், அதானி துறைமுகம் ஆகியவற்றின் வருகையால் கடலும் ஏரியும் சந்திக்கும் முகத்துவாரம் பகுதியில் மணல் தீட்டுக்கள் உருவாகி இயல்புநிலை நீரோட்டத்தில், தடை ஏற்பட்டு ஏரி யில் நீர் கொந்தளிப்பு ஏற்படும் போது கரையோரம் நிறுத்தப்படும் படகு கள், மற்றும் மீன்பிடி உபகரணங்கள் சேதம் அடைந்து வருவதை தவிர்க்கும் வகையில் மீன்பிடித் துறை முகம் அமைத்து தர வேண்டும் என்பது மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். அதன் அடிப்படை யில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அரங்கம் குப்பம்-வைரவன் குப்பம் இடையே 500 மீட்டர் இடைவெளியில் மீன்பிடித் துறை முகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, தேசிய வனத்துறை மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்ச கத்தின் அனுமதிக்காக தமிழக மீன்வளத்துறை சார்பில் கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் அப்பகுதி மீனவர்க ளின் எதிர்ப்பால் மாற்று இடத்தில் மீன் பிடி துறைமுகம் அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் ஜூலை 8 அன்று ஆண்டார்மடம்  புயல் பாதுகாப்பு மையத்தில், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலை மையில் நடைபெற்றது. அப்போது பெரும்பாலான மீனவர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடம் பாதுகாப்பானது அல்ல என்ப தால், கூனங்குப்பம் வடக்கு பகுதி யில் மீன் பிடி துறைமுக திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலி யுறுத்தினர். இதனையடுத்து செய்தி யாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மீன வர்களின் கருத்தை அரசின் கவ னத்திற்கு கொண்டு சென்று,  மீன்பிடி துறைமுகத்திற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

;