districts

img

நூறுநாள் வேலையை 200 நாளாக உயர்த்துக: தொழிலாளர்கள், விவசாயிகள் பிரச்சாரம்

திருவள்ளூர், மார்ச் 9- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி சிஐடியு, விச, விதொச  ஆகிய அமைப்புகள் சார்பில் புதனன்று (மார்ச் 8)  நடைபயணம் மேற்கொண்டனர். வேளாண் விளை பொருட்களுக்கு ஆதார விலையினை ஒன்றரை மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும், குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும், நூறு நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக்கி ரூ.600 தினக்கூலியாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் இந்த பிரச்சார நடைபயணம்  நடைபெற்றது. திருவள்ளூரை அடுத்த பேரத்தூரில் துவங்கிய பிரச்சார நடைபயணத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில  செயலாளர் பி.துளசிநாராயணன், விவசாய  தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர்  அ.து.கோதண்டன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ் அரசு ஆகியோர் தலைமை தாங்கினார்.இதில்  கே.செல்வராஜ், கலையரசன், விஜயகாந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருத்தணி காந்தி நகரில் துவங்கிய நடைபயணம் 6 ஊராட்சிகளில் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சிஐடியு மாவட்ட பொரு ளாளர் என்.நித்தியானந்தம், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சி.பெரு மாள், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் இ.தவமணி, உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்.கே.பேட்டை அய்யநெரியில் துவங்கிய நடைபயணம் வங்கனூர், அம்மை யார் குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்க ளில் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.சம்பத், கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஜெயச்சந்திரன், கே.ஜி.கணேசன், வேலு, மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர் வஜ்ஜிரவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;