districts

img

மாணவர்கள் சேர்க்கையில் ஆதிதிராவிடருக்கு முன்னுரிமை: மாணவர் சங்கம் கோரிக்கை

திருவள்ளூர், செப் 16- பொன்னேரி எல்என்ஜி கல்லூரியில் மாண வர்கள் சேர்க்கையின் போது ஆதி திராவிடர் மாண வர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பொன்னேரியில் அரசுக்கு சொந்தமான எல். என்.ஜி கல்லூரியில் 5000க்கும் மேற்பட்ட மாண வர்கள் கல்வி பயின்று வரு கின்றனர்.  இங்கு ஆண்டு தோறும் மாணவர்கள் சேர்க்கையின் போது சமூக நீதியை கடைபிடிப்ப தில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக வருடம் தோறும் மாண வர்கள் சேர்க்கையின் போது ஆதிதிராவிடர் மாண வர்கள் சேர்க்கை குறைந்து ள்ளது. இது பெற்றோர்க ளுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் கூடுதல் மாண வர்களை சேர்க்க வேண்டும் என கல்லூரி நிர்வாகம் சென்னை பல்கலைக்கழகத்தில் அனு மதி கோரியுள்ளது. இதனை தொடர்ந்து 20 விழுக்காடு வரை மாண வர்கள் சேர்க்கைக்கு பல்கலைக்கழகம் ஒப்பு தல் அளித்துள்ளது.அந்த 20 விழுக்காடிலும் ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று (செப் 16) பொன்னேரி கோட்டாட்சியர் காயத்ரியி டம் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ள ஆதி திராவிடர் மாணவர்களை கல்லூரியில் சேர்க்க அனுமதிக்க வேண்டும் என மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் உடனடி யாக ஆய்வு செய்வதாக கூறி யுள்ளார். இதில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.சுவேதா, மாவட்ட செய லாளர் ஆ.டிக்சன், மாநில குழு உறுப்பினர் எம்.லட்சுமி ஷேகால், கிளை நிர்வாகி கள் ராகேஷ், விஜய் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

;