districts

சுற்றுச்சுவர் எழுப்பியதில் முறைகேடு நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

 திருவள்ளூர், ஜன.26- திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், மெய்யூர் ஊராட்சியில் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வரு கின்றனர்.  இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளி வளாகம் ஆடு, மாடுகளின் புகலிடமாக இருந்தது. இரவு நேரத்தில் சமுக விரோதிகள் மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வந்தனர். இதனால் பள்ளிக்கு 2020-21 ல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் மூலம் சுற்றுச்சுவர் எழுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது. சுற்றுச்சுவர் 116.8 மீட்டராகும். ஆனால் 66 மீட்டர் மட்டும் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இந்த சூழலில் 140 மீட்டர் அளவிற்கு சுற்றுச்சுவர் எழுப்பியதாக ரூ.6 லட்சத்து 90,242 பணம் பட்டுவாடா செய்துள்ளதாக கூறப்படுகிறது. எழுப்பாத சுவருக்கு பணத்தை பெற்றதோடு, நூறு நாள் வேலைத் திட்டத்திலும் கூடுதலாக பணத்தை பெற்றுள்ளதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருவள்ளூர் வட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு, வட்டக் குழு உறுப்பினர் கே.முருகன் ஆகியோர் சுற்றுச் சுவர் எழுப்பியதில் முறைகேடுகள் நடைபெற்றது. இந்த முறை கேட்டில்  ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று (ஜன 23) திரு வள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

;