districts

img

சுடுகாட்டை வளைத்துபோட்ட ரயில்வே நிர்வாகம் வட்டாட்சியர் தலையிட சிபிஎம் வலியுறுத்தல்

திருவள்ளூர், ஜூன் 27- திருப்பேர் கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வரும் சுடுகாட்டை,  ரயில்வே நிர்வாகம் ஆக்கிர மித்து சுற்றுச்சுவர் எழுப்புவதை கைவிட வேண்டும் என கிராம பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட ஏலியம்பேடு ஊராட்சியை சேர்ந்த திருப்பேர் கிராமம் கவரைப்பேட்டை ரயில்வே நிலையம் அருகில் உள்ளது. இங்கு உள்ள கனகம்பாக்கம், திருப்பேர் ஆகிய இரண்டு கிராமங்க ளில் ஆதிதிராவிடர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமங்க ளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

 திருப்பேர் கிராமத்தில் கிராம நத்தம் புறம்போக்கு நிலத்தில் 33 செண்டு நிலத்தில் சுடுகாடு அமைந்துள்ளது. அதற்கான பாதையும் அமைந்துள்ளது. இதனை அம்மக்கள் காலம் காலமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ரயில்வே நிர்வாகம் தற்போது  சுடுகாடு மற்றும் சுடுகாட்டு பாதையை ஆக்கிரமிப்பு செய்து திடீரென சுற்றுச்சுவர் எழுப்ப சிமெண்ட் கம்பங்கள் நட்டு வருகிறது.  சுடுகாட்டை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்து விட்டால் பிணங்களை எரிக்கவோ, புதைக்கவோ முடியாத நிலை ஏற்படும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள் ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்

இது குறித்து சிபிஎம் கும்மிடிப்பூண்டி வட்டக்குழு உறுப்பினர் எம்.சி.சீனு, கிளைச் செயலாளர் வி.ரவிச்சந்திரன், விவ சாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் ஜி.கோவிந்தராஜ் ஆகியோர்  கூறுகையில், கவரைப்பேட்டை அருகில் உள்ள திருப்பேர் கிராமத்தில் அமைந்துள்ள சுடுகாட்டை  அனைத்து தரப்பினரும் பயன்படுத்திவருகின்றனர். இதனை ரயில்வே நிர்வாகம்  ஆக்கிர மிக்கும் வேலையை செய்து வருகிறது. இதில் பொன்னேரி வட்டாட்சியர்  உடனடி யாக தலையிட்டு பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி யுள்ளனர்.
 

;