districts

சிபிஎம் கிளைச்செயலாளர் ஜோதி மீது கொலை வெறித் தாக்குதல்

திருவள்ளூர், செப் 4- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் ஜோதியை மீது தாக்கு தல் நடத்தி, கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சியின் வட்ட செயலாளர் வலியுறுத்தியுள்ளார். கும்மிடிப்பூண்டியை அடுத்த ராஜா பாளையம் கிராமத்தில் வசிக்கும் ஜோதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளராக உள்ளார். ஜோதி யின் மனைவி பொம்மி என்பவர் பெரிய சோழியம்பாக்கத்தில் உள்ள தன் குடும்ப சொத்தில் பங்கு கேட்டு உள்ளார். உறவினர்கள் மாரிமுத்து மற்றும் குமரன் தர மறுத்ததால் பொன்னேரியில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் வழக்கை திரும்ப பெற வேண்டும் என மிரட்டி ஜோதியை வழி மறித்து தாக்கியுள்ளனர். வழக்கை திரும்ப பெறவில்லை என்றால் குடும்பத்தோடு கொலை செய்துவிடுவேன் என மாரிமுத்து மற்றும் குமரன் ஆகியோர் மிரட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பொன்னேரி நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதில் பொம்மிக்கு குடும்ப சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் பொம்மிக்கு சேரவேண்டிய சொத்தை வழங்காமல் உறவினர்கள் மிரட்டி வருகின்றனர். இது குறித்து கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் 30 நாட்களில் பொம்மிக்கு சேர வேண்டிய சொத்தை வழங்குவதாக எழுத்து பூர்வமாக உறுதியளித்தனர். நான்கு மாதங்கள் கடந்த பிறகும் தராமல் ஏமற்றிவந்தனர். இதையடுத்து நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல், கொலைமிரட்டல் விடுத்து வரும் மாரிமுத்து மற்றும் குமரன் மீது கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சிபிஎம் ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில்  ஜோதியை அடித்து கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது  நடவடிக்கை எடுக்காத  கும்மிடிப்பூண்டி காவல்நிலைய அதிகாரிகளை கண்டித்து விரைவில்  ஆர்ப்பாட்டம்  நடத்த உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

;