districts

தடப்பெரும்பாக்கம் ஓடைக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

திருவள்ளூர், மார்ச் 6- பொன்னேரியை அடுத்த  தடபெரும்  பாக்கத்தில் உள்ள ஓடை கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதை அப்பகுதி மக்கள் வரவேற்றுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகில் உள்ள தடப்பெரும்பாக்கம் ஊராட்சி யில் பொன்னேரி, திருவெற்றியூர் டி.எச்.நெடுஞ்சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால் ஓடை  சுமார் 100 அடி அகலத்திற்கு  2 கி.மீ  தூரம் வரை அமைந்துள்ளது. இந்த ஓடை கால்வாய் ஓரம் சிறு கடைகள்  முதல் பெரிய கடைகள்  வரை கால்வாயை ஆக்கிரமித்து சட்ட விரோத மாக கட்டிடங்கள் எழுப்பியுள்ளனர். இத னால் மழைக்காலங்களில் வெள்ளநீர் வீடு களுக்குள்  புகுந்து   விடுவதால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கின்றனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி நீர் நிலை கள் மற்றும் ஓடை பாது காப்பு இயக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பாக பலகட்ட போராட்டங்கள் நடைபெற்றன.  இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டங்கள், முற்றுகை போராட்டம் என தொடர்ந்து நடைபெற்றன.எனினும்  அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் சென்னை உயர் நீதி மன்றத்தில் தடப்பெரும்பாக்கம் பஞ்சா யத்தில் நீர் நிலைகளையும் காலவ்வாய்க ளையும் ஆக்கிரமிப்பு செய்த தனி நபர்க ளின் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி  "நீர்நிலைகள் மற்றும் ஓடை பாதுகாப்பு" இயக்கத்தின் தலைவர் கே.விஜயன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது இரண்டு வார காலத்தில் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் தடப்பெரும்பாக்கம் பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் ஆக்கிர மிப்புகளை அகற்றி வரும் 17ஆம்தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறை பாதுகாப்பு வழங்குமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த தீர்ப்பை நீர்நிலைகள் மற்றும் ஓடை பாதுகாப்பு இயக்கத்தின் செயலாளர் வழக்கறிஞர் ஆர்.காளமேகம் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் வரவேற்றுள்ளனர்.

;