districts

img

வல்லூர் அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்

திருவள்ளூர், பிப் 9-  ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் வல்லூர்அனல் மின்  நிலைய ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் இரண்டாவது நாளாகவும் நீடித்தது. திருவள்ளூர் மாவட்டம் வல்லூர்அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளுதல், சாம்பல் பிரிவு, மின் உற்பத்தி என பல்வேறு பிரிவுகளில் 1500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தேசிய அனல் மின்  கழகமும் இணைந்து வல்லூர் அனல் மின் நிலையத்தின் 3 அலகுகளிலும் தலா 500  மெகாவாட் என 1500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுக ளுக்கு மேலாக பணியாற்றி வரும் இந்த தொழிலாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,  தங்க ளுக்கு ஊதிய உயர்வு, அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்ற க்கோரி நீண்ட நாட்க ளாக போராடி வருகின்றனர். இதுகுறித்து சென்னை தொழிலாளர் நலவாரியத் தில் பேயச்சுவார்த்தை நடந்து  ஓராண்டாகியும் ஊதிய உயர்வு வழங்கவில்லை. இதனால், பிப்ரவரி 8 அன்று காலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களிடம் மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு திரும்புவோம் என்று போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த போராட்டம் தொ டர்ந்து நீடிக்கும் பட்சத்தில் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் உள்ளது.

;