districts

img

திருவள்ளூரில் புத்தக திருவிழா

திருவள்ளூரில் நடைபெற்றுவரும் புத்தக திருவிழா, கண்காட்சியில் கால்நடை பராமரிப்பு மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பாக நடைபெற்ற செல்ல பிராணிகள்(நாய்கள்) கண்காட்சியில் உரிமையாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் கால்நடை பராமரிப்புத்தறை   மண்டல இணை இயக்குநர் மருத்துவர் இரா.ராஜேந்திரன், செய்தி மக்கள் தொடர்புத் துறை மாவட்ட அலுவலர் டி. பாபு மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், நிலத்தடி நீரை உயர்த்தவும், நீர் நிலைகளை பராமரிக்கவும் தென்னை மரக்கன்றுகளை நட்டு கரைகளை பலப்படுத்த உழவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தென்னங்கன்றுகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் இரா.ஆனந்தகுமார், பட்டிமன்ற பேச்சாளர் பாரதிபாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.