districts

img

கூடுதல் பேருந்து இயக்ககோரி மாணவர்கள் போராட்டம்

திருவள்ளூர், செப். 22- கல்லூரி செல்ல கூடுதல் பேருந்துகளை இயக்க  வலியுறுத்தி தச்சூர் கூட்டு சாலையில் பேருந்து சிறை பிடிக்கும் போராட்டம் இந்திய மாண வர் சங்கத்தின் தலைமை யில் புதனன்று (செப் 21)  நடைபெற்றது. ஊத்துக்கோட்டை வழித்தடத்தில் பெரிய பாளையம், கன்னி கைப்பேர், ஜனப்பன் சத்திரம் கூட்டுச்சாலை, கும்மிடி ப்பூண்டி வழித் தடத்தில் ஆரம்பாக்கம், கவரைப்பேட்டை உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 2000 கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தச்சூர் கூட்டு சாலை வழி யாக பொன்னேரியில் உள்ள எல்என்ஜி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயில வந்து செல்கின்றனர். ஆனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப காலை மற்றும் மாலை நேரங்களில் போது மான பேருந்துகள் இயக்கப்பட வில்லை. இதனால் குறித்த நேரத்தில் கல்லூரிக்கு செல்ல முடியவில்லை.பேருந்து நிறுத்தத்திலேயே  தினம் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது. இந்நிலையில் கல்லூ ரிக்கு வந்து செல்லும் நேரத்தில் கூடுதல் பேருந்து களை இயக்கவேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் லட்சுமி ஷேகால் தலைமை யில் புதனன்று (செப் 21) மாலை தச்சூர் கூட்டுச் சாலை அருகில்  அரசு பேருந்துகளை சிறை பிடித்தனர்.தகவல் அறிந்து விழுப்புரம் கோட்ட பொன்னேரி பணிமனை கிளை மேலாளர், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திர சேகர் ஆகியோர்  மாணவர்க ளிடம் பேச்சு. இனி தொடர்ந்து கல்லூரி நேரங்க ளில் கூடுதல் பேருந்து களை இயக்க நட வடிக்கை எடுக்கப்படும்.மேலும் மாநகர பேருந்து களையும் இயக்க நட வடிக்கை எடுப்பதாக உறுதி யளித்துள்ளனர்.இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் மு.லட்சுமி ஷேகல், மாவட்டச் செய லாளர் ஆ. டிக்சன்,  கிளை உறுப்பினர் விஜய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;