districts

img

மின்கம்பங்கள் இல்லாத மாநில நெடுஞ்சாலை-பொதுமக்கள் அச்சம்

திருவள்ளூர், பிப்.2- செங்குன்றம் முதல் திருவள்ளூர் வரை உள்ள மாநில நெடுஞ்சாலையில் மின் கம்பங்களை நட்டு மின் விளக்குகளை அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. செங்குன்றம் கூட்டுச்  சாலை முதல் திருவள்ளூர் வரை மாநில நெடுஞ்சாலை சுமார் 40 கிலோ மீட்டர் தூரம்  செல்கிறது.இந்த சாலை வழி தடத்தில் மாநகர பேருந்து கள், தனியார் பேருந்து கள், சரக்கு வாகனங்கள், இரண்டு சக்கர வாகனங் கள் என ஏராளமான வாகனங் கள் வந்து செல்கின்றன.மாவட்டத்தின் தலைநகர் திருவள்ளூர் என்பதால் பல்வேறு அலுவல்கள் காரணமாக பொது மக்கள், அதிகாரிகள் அன்றாடம் பயணிக்கும் சாலையாக இது உள்ளது. நல்லூர், எடப்பாளை யம், பூச்சத்திப்பேடு, தாமரை பாக்கம் கூட்டுச் சாலை, வெள்ளியூர், கீழானூர், விஷ்ணுவாக்கம், ஈக்காடு வழியாக திருவள்ளூர் செல்ல வேண்டும், இந்த பகுதியில் சாலையோரம் சில இடங்களில் மின் கம் பங்கள் இன்னும் அமைக் கப்படவில்லை. இதனால் மின் விளக்குகள் இன்றி இரவு நேரங்களில், இருள் சூழ்ந்துள்ளதால் பொது மக்கள் அச்சத்துடன் பய ணிக்கின்றனர். இந்த நிலையில் சாலை யின் இரண்டு பக்கங்களி லும் மின் கம்பங்களை நட்டு,  மின் விளக்குகளை பொறுத்த வேண்டும். ஆங் காங்கே சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். சாலை நடுவில் உள்ள சிமெண்ட் தடுப்புச் சுவர்களை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.நடே சன், எஸ்.எம்.அனீப் ஆகி யோர் புதனன்று (பிப் 1) பொன்னேரியில் உள்ள நெடுஞ்சாலை உதவி செயற் பொறியாளர் அலுவல கத்தில் மனு அளித்தனர். இந்த கோரிக்கை 2021 முதல்  சிபிஎம் சார்பில்  வலியுறுத்தி  வருவதாக கூறினர்.மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளின் கவ னத்திற்கு கொண்டு செல்வ தாக தெரிவித்துள்ளார்.