districts

10ஆம் வகுப்பு தேர்வு காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 1,563 பேர் எழுதவில்லை

திருவள்ளூர், ஏப்.7-  தமிழ்நாட்டில் வியாழனன்று (ஏப்.6)  10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது.   காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல் பட்டு மாவட்டங்களில்  மொத்தம் 1 லட்சத்து 3 ஆயிரத்து 997 பேர் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இந்த நிலையில் முதல் நாள் தேர்வில் இந்த 3 மாவட்டங்களில் மொத்தம் 1563 பேர்  தேர்வு எழுத வரவில்லை. இது அதிகாரி களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 832 பேரில் 270 பேர் தேர்வுக்கு வரவில்லை. இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 37  ஆயிரத்து 350 பேரில் 582 பேர் தேர்வு  எழுதவில்லை. அதிகபட்சமாக திருவள்ளூர்  மாவட்டத்தில் 49 ஆயிரத்து 455 பேரில்  711 பேர் தேர்வு எழுத வராமல் இருந்துள்ள னர். மாணவர்கள் தேர்வு எழுத வராதது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசா ரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் நேரில் கேட்டறிய திட்டமிட்டு உள்ளனர். இது குறித்து திருவள்ளூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரி ராமனிடம் கேட்டபோது, திருவள்ளூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் நாளில் 711 பேர் தேர்வு எழுத வரவில்லை.  தேர்வு எழுதாத மாணவர்களை வருகிற ஜுன் மாதத்தில் நடைபெறும் தேர்வில் பங்கேற்க வைக்க அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். ஜூலை மாதத்தில் அந்த மாணவர்கள் பிளஸ்-1 வகுப்பில் சேரும் வகையில் தேர்வு எழுத தயார் படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

;