திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஜமுனாமரத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபாதை வியாபாரிகள் சங்க துவக்க விழா ஆர். சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.பாரி, மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் வே.சங்கர், நிர்வாகிகள் ப.செல்வன், ரவிதாசன், உதயகுமார், எம்.டி.கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.