districts

img

சட்டத்திற்கு புறம்பான சுங்கச்சாவடியை அகற்றக்கோரி போராட்டம்

திருவண்ணாமலை, செப்.8- திருவண்ணாமலை அருகே நீர்நிலை, ஓடை களை ஆக்கிரமித்து, சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடியை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை - வேலூர் சாலையில் (என்.எச்.38) தீபம் நகர் அருகில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடி, பொதுமக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  குறிப்பாக,  அருகாமை கிராமங்களில் இருந்து வரு கிற விவசாய பொருட்க ளுக்கும், விவசாய டிராக்டர் கள், லோடு லாரிகள், மினி லோடு லாரிகள் என அனைத்து வகை வாக னங்களுக்கும் சுங்க கட்டண வசூலித்து வருகின்றனர். இதனால் பாதிக்கும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த  விவசாயிகள், பொதுமக்கள், வியாபாரிகள் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி கடந்த 2ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் சந்தித்து மனு கொடுத்தனர். இதேபோல் திமுக, அதிமுக உள்ளட்ட பல்வேறு கட்சி யினரும் இந்த சங்கச் சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்துள்ள னர். ஆனால் எந்தவித நட வடிக்கையும் எடுக்காததால் வியாழனன்று (செப். 8) மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் சுங்கச் சாவடியை முற்றுகையிட்ட னர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவண்ணாமலை வட்டாட்சியர் சுரேஷ், மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி கள் மற்றும் சுங்கச் சாவடி நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். கட்சி நிர்வாகிகள், வரு வாய்த்துறையினர், சுங்கச் சாவடி நிர்வாகிகள் கலந்து கொள்ளும் முத்தரப்பு கூட்டத்தை அடுத்தவாரம் நடத்துவது என்றும் முடிவு செய்தனர். இதனையடுத்து, போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த போராட்டத்தில் சிபி எம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், செயற் குழு உறுப்பினர்கள், எம். வீரபத்திரன், எம்.பிரக நாதன், ப.செல்வன், இரா.பாரி, எ.லட்சமணன், மாவட்டக் குழு உறுப்பினர் கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;