திருவண்ணாமலை, மே 17- விசாரணைக்காக காவல்நிலை யத்திற்கு அழைத்து செல்லப்பட்ட தங்கமணியின் மரணத்திற்கு நீதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் தட்டரணை கிராமத்தில் வசித்து வந்த வர் மலை குறவன் சமூக சேர்ந்த தங்க மணி. விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், கொடுமைப் படுத்தி சித்ரவதை செய்து படுகொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு காரணமான திருவண்ணாமலை கலால் பிரிவு ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் மீது கொலை, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க வலியுறுத்தியும், உயிரிழந்த தங்கமணி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், இழப் பீடாக ரூபாய் 50 லட்சமும வழங்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு கோரிக்கைகளை வலியுறுத்தி உரை யாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் எம்.வீரபத்திரன், ஏம்.பிரகலநாதன், ப.செல்வன், இரா.பாரி, கே. வாசுகி, எஸ்.ராமதாஸ், எ. இலட்சுமணன், வழக்க றிஞர் அபிராமன், மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆர். சரவணன், மாவட்ட, வட்டார நிர்வாகி கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.