districts

img

யூரியா விற்றதில் ரூ. 90 கோடி முறைகேடு: விவசாயிகள் மீண்டும் காத்திருப்பு போராட்டம்

திருவண்ணாமலை,மே.31- திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு யூரியா விற்பனை செய்ததில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளது. அதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 26 ஆம் தேதி திருவண்ணாமலை வேளாண் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திய வேளாண்மை (பொறுப்பு) இணை இயக்குநர், வட்டாட்சி யர்,  காவல்துறையினர் அளித்த உறுதிய தைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை (மே.27) அதிகாலை, முற்றுகையை கைவிட்டு விவ  சாயிகள் கலைந்து சென்றனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி  பலராமன் தலைமையில் விவசாயிகள் மீண்டும் செவ்வாயன்று (மே 31)காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர். இந்த போராட்டத்தில், வழக்கறிஞர் எஸ்.அபிராமன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.கே.வெங்கடேசன், அழகேசன், ஒன்றியத் தலைவர்கள் லட்சுமணன், பழனி, செயலாளர் ரஜினி ஏழுமலை, நிர்வாகி கள் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.

;