districts

img

சாலைப் பணியாளர்கள் வாழ்வை பாதுகாக்க வேண்டும்: முதலமைச்சருக்கு மா.சின்னதுரை எம்எல்ஏ கோரிக்கை

திருவண்ணாமலை, ஜூலை 17-   சாலை அமைக்கும் பணி யாளர்களே, சாலையை முடக்கும் நிலையை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மா. சின்னதுரை எம்எல்ஏ கோரிக்கை விடுத்தார். தமிழ்நாடு நெடுஞ் சாலை துறை சாலை பணி யாளர்கள் சங்கத்தின் 18வது மாநில சிறப்பு மாநாடு திரு வண்ணாமலையில் நடை பெற்றது. இதையொட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரை யாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் மா. சின்ன துரை,“தமிழ்நாட்டு மக்க ளின் பல்வேறு கோரிக்கை களை நிறைவேற்றி வரும் முதல்வர், தங்களது பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும் என்று சாலைப் பணியாளர்கள் கோரிக்கை வைப்பதை பணவிரயமே இல்லாமல் நிறைவேற்ற முடியும்” என்றார். தமிழகத்தில் பல்வேறு நகரங்களுக்கு சாலை அமைக்கும் பணிக ளில் ஈடுபட்டு வரும் பணி யாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க  சரியான வழியை காட்டட வேண்டும் என்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எஸ் .எஸ். பாலாஜி, “முன்னாள் முதல்வர் கலைஞர்   அரசு ஊழியர் சங்கங்களுக்கு உரிய மரியாதை தருபவர். அதே போன்று தற்போதைய முதல்வர் மு .க. ஸ்டாலின் சாலை பணியாளர்களின் கோரிக்கைகளை கண்டிப் பாக நிறைவேற்றுவார் என்றும் நம்பிக்கை தெரி வித்தார்.

சாலை பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆ.அம்சராஜ்,“ சாலை பணியாளர்களின் நலனை சீரழித்த அதிமுக ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்று தீர் மானித்து, அதை நிறை வேற்றினோம். தற்போது எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலை வர் மு. அன்பரசு, “விடி யலை தருவேன் என்று ஆட்சிக்கு வந்த முதல்வர், சாலை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம்”என்றார். முன்னதாக வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக் காணக்கான சாலை பணி யாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

;