districts

img

மாற்றுத்திறனாளிகள் ஆவேச போராட்டம்!

திருவண்ணாமலை,ஜூலை 16- உதவித்தொகை கேட்டு விண்ணப்பம் செய்து 18 மாதங்க ளாக காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்காத அதிகாரிகளை கண்டித்து தமிழ்நாடு மாநாடு மாவட்ட ஆட்சியர்களிடம் மாற்றுத் திறனாளிகளை ஒப்படைக்கும் போராட்டம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நடைபெற்றது. 

அதன் ஒரு பகுதியாக, திரு வண்ணாமலை மாவட்டத்தில் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சி. ரமேஷ் பாபு தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் இரா. சிவாஜி, பொருளாளர் சத்யா, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா. சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தூளியில் வந்த மாற்றுத்திறனாளிகள்!

இந்த போராட்டத்தில் பங்கேற்ற சில மாற்றுத் திறனாளி களை தொட்டில் கட்டி தூக்கி சுமந்து வந்தனர். அப்போது போலீசாருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஆட்சியர் பாஸ்கர பாண்டியனை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

கடலூரில் போலீஸ் குவிப்பு

கடலூர் ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்ட னர். போராட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டி ருந்தனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் இராம.நடேசன் தலைமை தாங்கினார்.  செயலாளர் ஆர்.ஆளவந்தார் துவக்கி வைத்தார். மாவட்டப் பொருளாளர் கோபால கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி-கிருஷ்ணகிரி  ஆட்சியர்கள் பேச்சுவார்த்தை!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்தனர். அப்போது, ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மாவட்ட தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் குப்புசாமி மற்றும் முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

சங்கத்தின் மாவட்டத் தலைவர் வேலு, மாநில துணைத் தலைவர் வி.ராதாகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் எம்.ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சி யரிடம் ஒப்படைக்கும் போராட் டத்தில் மாவட்டத் தலைவர் திருப்பதி, செயலாளர் பெரிய சாமி,பொருளாளர் எஸ்ஆர். ஜெய ராமன், சிபிஎம் மாவட்டச் செய லாளர் ஜி.கே. நஞ்சுண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தை யில் மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர் பி.முருகன், பொருளாளர் ஜெயக்குமார், சிபிஎம் மாவட்ட செயற்குழு  உறுப்பினர் ஏ.சங்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஒருங்கிணைந்த வேலூர்-திருப்பத்தூர் மாவட்டத்தின் சார்பில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.கோவிந்தராஜ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சீனிவாசன், பொருளாளர் ஏ.குருமூர்த்தி உட்பட 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.