districts

img

அடிவாரம் மக்களை அகற்றுவதை கைவிட சிபிஎம் கோரிக்கை

திருவண்ணாமலை, செப்.21- திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஒன்றியம், வீரனந்தல் கிராமத்தில் அடிவாரம் பகுதியில் வசிக்கும் மக்களை நீர்நிலை ப்பகுதி என காரணம் காட்டி, அகற்று வதை கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா, புதுப்பாளையம் அடுத்த வீரனந்தல் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், வீரனந்தல் கிராமத்தின் அடிவாரம் பகுதியில் வசிக்கும் குடும்பங்களை, நீர்நிலைப்பகுதி என்று காரணம் காட்டி, அப்புறப்படுத்த வேண்டும் என புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் வாயிலாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, புதனன்று (செப்.21)  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செங்கம் துணை வட்டாட்சியரிடம், கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. புதுப்பாளையம் ஒன்றியத்தில்,  பட்டா இல்லாமல் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும், 4 தலைமுறையாகவீடும், நிலமுமாக வாழ்ந்து வருபவர்களை அப்புறப்படுத்த கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி  மனு அளிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எ.லட்சுமணன், கலசப்பாக்கம் தாலுகா செயலாளர்  பி.சுந்தர், மாவட்டக்குழு உறுப்பினர்  சி.எம்.பிரகாஷ்,  செங்கம் நகர செயலாளர்  எம்.சரவணன்,  விவசாயிகள்  சங்க நிர்வாகி ஏழுமலை மற்றும் பாதிக்க ப்பட்ட மக்கள் உடனிருந்தனர்.

;