districts

img

பின்னலாடைக்கான நூல் விலை குறைவு  

பின்னலாடை உற்பத்தியின் முக்கிய மூலப்பொருளான நூல் விலையை கிலோவிற்கு ரூபாய் 10 குறைத்து தனியார் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.  

திருப்பூரில் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான நூல் விலையானது கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதிலும் கடந்த 1 ஆம் தேதி மட்டும் அனைத்து ரகமான நூல்களும் கிலோவுக்கு ரூ.50 வரையில் உயர்த்தப்பட்டது. இதனடிப்படையில் திருப்பூர் பின்னலாடை தொழில் கூட்டமைப்பு சார்பில் விலை உயர்வை கண்டித்தும், பஞ்சு நூல் ஏற்றுமதியை தடை செய்ய கோரியும் தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது. மேலும் திருப்பூரில் கடந்த 26 ஆம் தேதி ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.  

இந்த நிலையில் நூற்பாலைகள் கூட்டமைப்பு சார்பில் ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி நூல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றனர். இதன்படி, பின்னலாடை உற்பத்திக்கான நூல் விலையானது அனைத்து ரகங்களுக்கும் சராசரியாக கிலோவுக்கு ரூ.10 குறைத்துள்ளதாக திருப்பூர் பின்னலாடை தொழில் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

;