districts

img

திருப்பூரில் மக்களை அச்சுறுத்திய சிறுத்தை; நான்கு நாள் போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது

திருப்பூர் மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்திய சிறுத்தை நான்கு நாள் போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது.

அவினாசி ஒன்றியம் பாப்பாங்குளத்தில் தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் திங்களன்று பதுங்கி இருந்த சிறுத்தை தோட்டத்து உரிமையாளர் மற்றும் தொழிலாளியை தாக்கியது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 7 பேரை சிறுத்தை தாக்கியது.  

இதையடுத்து தகவலறிந்த வனத்துறையினர், வருவாய்த்துறையினர், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் இணைந்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பெருமாநல்லூர் பகுதிகளை தாண்டி இன்று திருப்பூர் நகருக்குள் சிறுத்தை நுழைந்ததையடுத்து திருப்பூர் மாவட்ட வனத்துறையினர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினரின் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

;