districts

img

சுகாதார நிலையத்தை தரம் உயர்த்திட வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

எரிசனம்பட்டி அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தினை தரம் உயர்த்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

எரிசனம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுப்பாட்டில்  உடுமலை ஒன்றியத்திலுள்ள 38 கிராமங்கள் பயன்பெற்று வருகின்றன.

எரிசனம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டுபாட்டில்  தளி, திருமூர்த்திநகர், ராவணாபுரம், ஜல்லிபட்டி, கொங்கலக்குறிச்சி, கொடிங்கியம் என எட்டு துணை சுகாதார நிலையங்களும் மேலும் மலைவாழ் குடியிருப்பு பகுதியான பூச்சிக்கொட்டாம்பாறை, கருமுட்டி, காட்டுப்பட்டி, மாவடப்பு, குழிப்பட்டி, குருமலை உள்ளிட்ட  மலைமக்கள் செட்டில்மெண்ட் பகுதிகளும் இந்த சுகாதார நிலைய கட்டுப்பாட்டில் உள்ளது.

எரிசனம்பட்டி சுகாதார நிலையத்திற்கு கிராமப் பகுதிகளிருந்து பொதுமக்கள் அதிகமாக வருவாதல் போதிய வசதிகள் இல்லாமல் ஆரம்பகால மக்கள் தொகையின் படி சுகாதார நிலையத்தில் மூன்று டாக்டர்கள் மற்றும் குறைந்த எண்ணிக்கையில் சுகாதார ஆய்வாளர்கள்,  செவிலியர்கள்  பணியாற்றி வருகின்றனர்.

 தினமும் சராசரியாக மூன்னூறுக்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், மாதத்திற்கு முப்பதுக்கும் மேற்பட்ட பிரசவங்களும், கர்ப்பிணி பெண்கள் பரிசோதனைகள் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பார்க்கப்படுகிறது. சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், போதுமான வசதிகள் மேம்படுத்தப்படாமல்  ஆறு படுக்கை வசதிகள் மட்டுமே உள்ளன. சராசரியாக பத்து  உள்நோயாளியாக அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் நோயாளிகள் மிகுந்த அவதிக்குள்ளாகிவருகின்றனர். கூடுதலாக படுக்கை வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் சார்பில் பல முறை அரசுக்கு கோரிக்கை வைக்கபட்ட நிலையில்

மலைவாழ் மக்கள் செட்டில்மெண்ட் பகுதி மக்களுக்காக மாவடப்பில் செயல்பட்டு வந்த துணை சுகாதார நிலையம் செயல்படாமல் போனதால்  மலை வாழ் மக்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் செட்டில்மெண்ட் பகுதிக்கு செல்கின்றனர்.

இதனால்  சுகாதார நிலையத்திற்கு வரும் புற நோயாளிகள் பல மணி நேரம் சிகிச்சைக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் இதர பணிகளுக்கு மருத்துவர்கள் செல்லும் நிலையில் கிராமப்புற மக்களுக்கு உடனடி சிகிச்சை கிடைப்பதில்லை.புறநோயாளிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை சிறப்பு மருந்துவர்கள் மற்றும் அதிக படுக்கை வசதிகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட  அரசு மருந்துவமனையாக மாற்ற வேண்டும் என்பதே இப்பகுதி கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

 

;