districts

img

அவிநாசி எம்எல்ஏ வீட்டில் கொள்ளை    

அவிநாசி அருகே ராக்கியாபாளையம் அவிநாசி சட்டமன்ற உறுப்பினர் தனபால் இல்லத்தில் வியாழனன்று கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.  

தமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகரும் தற்போதைய அவிநாசி சட்டமன்ற உறுப்பினருமான தனபால் இல்லம் அவிநாசியை அடுத்த ராக்கியப்பாளையத்தில் அமைந்துள்ளது. இவர் தொகுதி மக்களின் குறைகளை கேட்டறியும் போது இந்த இல்லத்தில் தங்குவதாக வழக்கமாக வைத்துள்ளார்.  

இந்த நிலையில் இவரது வீட்டை உடைத்து உள்ளே இருந்த ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் இரண்டு குத்து விளக்குகள் கொள்ளையடுக்கப்பட்டிருப்பது தெரியவந்ததுள்ளது.  இதையடுத்து திருமுருகன்பூண்டி போலீசார் ஒரு வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை சோதனை மேற்கொண்டதில் இன்று அதிகாலை 4 மணியளவில் அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்தது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;