திருப்பூர், மே 7- கால்நடைகளுக்கான பசுந்தீவ னம் மற்றும் உலர் தீவனங்களை தமிழ்நாடு அரசு ஆவின் சொசைட்டி களின் மூலமாக கொள்முதல் செய்து, பால் உற்பத்தியாளர் களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம், திருப்பூரில் தியாகி பழனிசாமி நிலையத்தில், மாநில தலைவர் கே. முகமது அலி தலைமையில் செவ் வாயன்று நடைபெற்றது. பால் உற் பத்தியாளர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் எஸ்.கே. கொளந்தசாமி வரவேற்றார்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தில், “தமிழகத்தில் தற்போது கடுமையான வறட்சி நிலவுவதால் கால்நடைகளுக்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லா மலும், வைக்கோல் போன்ற உலர் தீவனங்களும் பசுந்தீவனங்களும் இல்லாமலும் கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள் ளது. இந்நிலையில் பாலின் உற் பத்தி அளவும் குறைந்து கொண்டு வருகிறது.
தவிடு, புண்ணாக்கு, பருத்திக் கொட்டை, கலப்புத் தீவனங்களின் விலைகள் பல மடங்கு உயர்ந் துள்ள நிலையில் தற்போது கால் நடைகளை வைத்து பராமரிக்க முடி யாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு கடந்த காலத்தில் ஆவின் சொசைட்டிகளின் மூலம் தீவ னங்களை இலவசமாக வழங்கி வந்ததைப் போல் தற்போதும் வைக்கோல் போன்ற உலர் தீவ னங்களையும், மக்காச்சோளத் தட்டு போன்ற பசுந் தீவனங்களை யும் கொள்முதல் செய்து உடனடி யாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இவ்வாறு தீர்மானம்
தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம், தமிழ்நாடு பால் உற் பத்தியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி. பெருமாள், மாநிலப் பொருளாளர் ஏ.எம். முனுசாமி, மாநில நிர்வாகிகள் எம். சிவாஜி, என். செல்லத்துரை, வெண்மணி சந்திரன், தீர்த்தகிரி, தமிழ்நாடு விவசாய சங்கத்தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வேலுச்சாமி நன்றி கூறினார்.