districts

தில்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக மத்திய அரசு அலுவலகங்கள் முன் தொடர் முற்றுகை மார்க்சிஸ்ட் கட்சி அறிவிப்பு

திருப்பூர், நவ. 30- தில்லியில் எழுச்சியுடன் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாயிகள் கோரிக்கையை ஏற்று கார்ப்பரேட் ஆதரவு வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்டத்தில் மத்திய அரசு அலுவ லகங்கள் முன்பாக தொடர் முற்று கைப் போராட்டம் நடத்துவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன் திங்களன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லியில் போராடும் விவசாயிக ளுக்கு ஆதரவாக டிசம்பர் 1 முதல் டிசம்பர் 4 வரை மத்திய அரசு அலுவ லகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு முடிவு செய்துள்ளது. இதன்படி,  டிசம்பர் 1ஆம் தேதி திருப்பூர் தெற்கு நகரம், அவிநாசி, ஊத்துக்குளி கமிட் டிகளும், டிசம்பர் 2ஆம் தேதி வேலம் பாளையம், திருப்பூர் தெற்கு ஒன்றி யம், காங்கயம், தாராபுரம் கமிட்டி கள் நடத்துவது எனவும், டிசம்பர் 3 ஆம் தேதி வடக்கு நகரம், வடக்கு ஒன்றியம், பொங்கலூர், பல்லடம் கமிட்டிகள் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4 ம் தேதி உடுமலை நகரம், ஒன்றி யம், குடிமங்கலம், மடத்துக்குளம், மலை கமிட்டிகள் உடுமலையில் முற்றுகைப் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இப் போராட்டங்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்பட அனைத்து முன்னணி ஊழியர்களும் பங்கேற் பது என்றும் முடிவு செய்யப்பட்டுள் ளது.  மேலும், திருப்பூரில் 3 நாட்களும் மத்திய தபால் நிலையத்தின் முன்பு தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப் பட்டுள்ளது. இப்போராட்டத்தில் கட்சி ஊழியர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் இதர வெகுஜன அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் மிகப்பெருந்திர ளாகப் பங்கேற்று மத்திய அரசுக்கு தங்கள் வலுவான எதிர்ப்பைத் தெரி வித்துப் போராடி வரும் இந்திய விவ சாயிகளுக்கு முழு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறு செ.முத்துக்கண்ணன் கூறியுள்ளார்.

;