திருப்பூர், மே 28 – திருப்பூரில் 16ஆவது ஆண் டாக, வரும் ஜூன் 3 முதல் 6 ஆம் தேதி வரை நிட்டெக் 2022 பின்ன லாடை இயந்திரக் கண்காட்சி நடை பெறுகிறது. ஹைடெக் இன்டர்நேஷனல் வர்த்தக கண்காட்சி அமைப்பின் நிர் வாகி ராயப்பா இந்த கண்காட்சி ஏற் பாடுகள் குறித்துக் கூறியதாவது: கடந்த 28 ஆண்டுகளாக எங்கள் நிறுவனம் பின்னலாடை இயந்திரம் மற்றும் தொழில் நுட்பக் கண்காட் சியை வெற்றிகரமாக நடத்தி வருகி றது. இந்தியாவில் பின்னலாடைத் துறைக்கு தனிச்சிறப்பாக நடத்தப் படும் கண்காட்சி இதுதான். கடந்த 1993ஆம் ஆண்டு 63 பங்கேற்பாளர் களுடன் முதல் கண்காட்சி தொடங் கப்பட்டது. இந்த ஆண்டு 16ஆவது முறையாக நடத்தப்படும் நிட்டெக் கண்காட்சியில் 200 பங்கேற்பாளர் கள் கலந்து கொள்கின்றனர். திருப்பூர் அருகே திருமுருகன் பூண்டி சுற்றுச் சாலையில் அமைந் துள்ள ஹைடெக் இன்டர்நேஷனல் வர்த்தகக் கண்காட்சி மைதானத் தில் ஜூன் 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி முடிய நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் முற்றிலும் குளி ரூட்டப்பட்ட 200க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வரு கின்றன. ஜெர்மனி, சிங்கப்பூர், ஜப்பான், சீனா, தைவான், தென் கொரியா, இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரியா, துருக்கி மற்றும் பல் வேறு மேலை நாடுகளில் இருந்து 160க்கும் மேற்பட்ட இயந்திர உற்பத் தியாளர்கள் மற்றும் விற்பனையா ளர்கள் இந்த கண்காட்சியில் பங் கேற்று தங்கள் தயாரிப்புகளை காட் சிப்படுத்த உள்ளனர்.
உலகின் தலை சிறந்த தையல் இயந்திரங்கள், சாயமிடும் இயந்தி ரங்கள், பிரிண்டிங், டிஜிட்டல் பிரிண் டிங், காம்பேக்டிங், ரிலாக்ஸ் டிரை யர், எம்பிராய்டரி, வாஷிங், தையல் ஊசிகள் உள்பட பின்னலாடைத் தொழிலுக்குத் தேவையான அனைத்து வகையான இயந்திரங் கள், தொழில்நுட்ப கருவிகள் ரூ.500 கோடி மதிப்பில் இங்கு பார்வைக் காக செயல்பாட்டு நிலையில் வைக் கப்பட உள்ளது. திருப்பூர் மட்டுமல்லாது, ஈரோடு, கரூர், மதுரை, சூரத், பெங்க ளூரு, கொல்கத்தா, லூதியானா, தில்லி, மும்பை உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பின்ன லாடை உற்பத்தி சார்ந்த பகுதிக ளில் இருந்து பார்வையாளர்கள் இங்கு வருகை தர உள்ளனர். இக் கண்காட்சிக்கு நேரில் வர இயலாத வர்களுக்காக மின் கண்காட்சி கையேடு வெளியிட உள்ளனர். இரண்டு லட்சம் பார்வையாளர் இலவச நுழைவுச் சீட்டுகள் வழங் கப்பட உள்ளன. பார்வையாளர் வச திக்காக பெரிய அளவுக்கு கார் மற்றும் இருசக்கர வாகன நிறுத்து மிட வசதி செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் பின்னலாடை தொழில் வளர்ச்சியில் முக்கிய தருணத்தில் இக்கண்காட்சி நடத்தப்படுவது புதிய சாத்தியங்களை பெற்றெ டுக்க உதவும். இவ்வாறு ராயப்பா தெரிவித்தார்.