districts

பிஏபி அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து மிரட்டல் அதிமுக பிரமுகர் மீது பொறியாளர்கள் ஆட்சியரிடம் புகார்

திருப்பூர், நவ. 25 - அதிமுகவைச் சேர்ந்த சிலர் அத்துமீறி பிஏபி பிரிவு அலுவலகத்தில் நுழைந்து, அங்கிருந்த அலுவலர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக பிஏபி பாசனப் பிரிவு பொறி யாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.  இது குறித்து பரம்பிக்குளம்-ஆழியார் பாசனத் திட்டத்தின் காங்கயம் உபகோட்ட உதவிப் பொறியாளர் க.பாஸ்கரன் தலைமையில் இந்த அலுவலக ஊழியர்கள் காங்கயம் காவல் துணை கண்கா ணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரகத் தில் புகார் மனு அளித்தனர்.  இம்மனுவில் கூறியிருப்பதாவது: பாஸ்கரன் ஆகிய நான், பாசனப் பிரிவு  எண் - 1, உதவிப் பொறியாளர் ப.ஜெகதீஷ்,  பாசனப் பிரிவு எண்: 2 உதவிப் பொறியா ளர் கோகுல சந்தான கிருஷ்ணன், பாசனப் பிரிவு எண்:1, உதவிப் பொறியாளர் உ.லாவண்யா ஆகியோர் உதவிப் பொறியா ளர்களாக ஆயக்கட்டு பிரிவாக்க காங்கயம் உப கோட்டத்தில் பணிபுரிந்து வருகிறோம். தற்போது திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டத்திற்கு உள்பட்ட பரம்பிக்குளம்-ஆழி யார் பாசனத் திட்டப் பகுதிகளுக்கு 2 ஆம்  மண்டலம் பாசனம் நடைபெற்று வருகி றது. கடந்த 10 ஆண்டுகளாக பாசன சபைத் தலைவர்கள் மற்றும் பெரும்பாலான விவசாயிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, நடைமுறையில் உள்ள மதகுகளை ஷிப்டு கள் அடிப்படையில் தண்ணீர் வழங்கப்படும் வழக்கத்தை மாற்றி, 6 நாள்கள் ஷிப்டுகள் இல்லாமல் நீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சிலர் கடந்த செவ்வாயன்று (நவ.17) ஆயக்கட்டு விரி வாக்க உபக்கோட்ட காங்கயம் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த னர். இந்நிலையில், மேற்கண்ட பிரச்சினை தொடர்பாக வெள்ளக்கோவில் பகுதியைச்  சேர்ந்த வெங்கடேச சுதர்சன் தலைமை யில்(அதிமுக- வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத் தலைவர்), பொன்பரப்பி முத்து ராஜ், வேப்பம்பாளையம் ஈஸ்வரமூர்த்தி,  தொட்டியபட்டி பெரியசாமி, உத்தமபாளை யம் முத்துக்குமார் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டோர் பரம்பிக்குளம்-ஆழி யார் திட்டம், ஆயக்கட்டு காங்கயம்  உபகோட்ட அலுவலகத்தில் கடந்த வெள்ளி யன்று அத்துமீறி கூட்டமாக அலுவல கத்தில் நுழைந்து, உதவிப் பொறியாளர்க ளால் வழங்க இயலாத சில நீரியியல் விவ ரங்களை கேட்டனர். வேண்டுமென்றே தகராறு செய்ய வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறு நடந்து கொண்டனர். மேற்படி நபர்கள் கோரிய விவரங்கள் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்ட போது, அவற்றைப் பெற்றுக் கொண்டு, உதவிப் பொறியாளர்களால் வழங்க இயலாத மேலும் கூடுதல் விவரங்களை கோரி, அவற்றை அலுவலக முத்திரையுடன் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தால் மட்டுமே இந்த அலுவலகத்தை விட்டுக் கிளம்புவோம் எனத் தெரிவித்தனர். அவர்கள் கூறிய கூடுதல் விவரங்களை  உடுமலையில் உள்ள திருமூர்த்தி கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம் எனத்  தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்காத  மேற்படி நபர்கள் எங்களை தரக்குறைவாகத் திட்டியதோடு, அலுவலகத்தை எரித்து விடு வோம் என மிரட்டினர். மேலும், பொய்யான வழக்குப் போட்டு, சிறையில் தள்ளி விடு வோம் என கொலை மிரட்டலும் விடுத்து கலைந்து சென்றனர். எனவே, ஊழியர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, எங்கள் அலுவலக ஊழியர்க ளுக்கும், நீர்ப் பங்கீட்டு பணிகளைக் கவ னிக்க வாய்க்காலுக்கு செல்லும் பணியா ளர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது  தொடர்பாக புகார் மனுவோடு வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களும் இணைக் கப்பட்டுள்ளதாக அந்த மனுவில் கூறப்பட் டுள்ளது.

;