districts

img

கூட்டுறவு ஓய்வு பெற்றோர் நலச் சங்க திருப்பூர் மாவட்டக் கிளை அமைப்பு

திருப்பூர், டிச. 9 - திருப்பூரில் அனைத்துக் கூட்டுறவு ஓய்வு பெற்றோர் நலச் சங்கத்தின் திருப்பூர்  மாவட்டக் கிளை ஞாயிறன்று அமைக்கப்பட்டது.

திருப்பூர் சிஐடியு அலுவ லகத்தில் நடைபெற்ற திருப் பூர் மாவட்டக் கிளை அமைப் புக் கூட்டத்திற்கு சிஐடியு கூட் டுறவுப் பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் பி.கௌதமன் தலைமை  ஏற்றார். கூட்டுறவு ஊழியர்களுக்கு கருணை  ஓய்வூதியம் வழங்கி ஆணை வெளியிடப்பட் டுள்ளதை வரவேற்று தமிழக அரசுக்கு நன்றி  தெரிவிக்கப்பட்டது. ஆணைகள் அனைத்தும்  கூட்டுறவு சங்கங்களுக்கு அறிவுறுத்தப் பட்டு விவரங்களை உடனடியாக பெறவும்,  எதிர்வரும் பொங்கல் திருநாளில் ஓய்வூதியம்  வழங்கி மகிழ்ச்சி திருநாளாக மாற்றிட அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இக்கூட்டத்தில் மாவட்ட தலைவராக பி. கௌதமன், செயலாளராக எம்.பி.மாதேஸ்வ ரன், பொருளாளராக கே.சி.இந்திரா காந்தி,  துணைத் தலைவராக எஸ்.சாந்தி, துணைச்  செயலாளராக ஜி.கேசவராவ் ஆகியோர்  தேர்வு செய்யப்பட்டனர் சங்கத்தின் தலைவர்  ஏ.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார்  மாவட்டத்திலிருந்து ஒரே நாளில் நாற்பதுக் கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்றோர் நலச் சங் கத்தில் இணைந்து கொண்டனர்.