districts

img

எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் சட்டசபை கூடும்போது முடிவு தெரியும் சபாநாயகர் அப்பாவு பேட்டி

திருநெல்வேலி,செப்.5- சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 151-ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் அமைந்துள்ள மணிமண்ட பத்தில் அவரது உருவ சிலை க்கு அரசு சார்பில் சபாநாய கர் அப்பாவு, மாவட்ட ஆட்சி யர் விஷ்ணு ஆகியோர் மாலை அணிவித்து மரி யாதை செய்தனர்.  இதனைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு செய்தி யாளர்களிடம் கூறியதா வது:- முதல்-அமைச்சர் அறி வித்தபடி ரூ.70 லட்சம் மதிப் பீட்டில் வ.உ.சி. மணி மண்ட பத்தில் ஒலி, ஒளி காட்சிகள் மூலம் அவரது வரலாற்றை  அனைவரும் காணும் வகை யிலான திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். வ.உ.சி.யின் 150-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் பாரதியார் 100-ஆவது நினைவுதினம் ஆகிய வற்றையொட்டி அவர்கள் 2 பேரும் படித்த பள்ளியில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் நினைவு வளைவு அமைக்கப்பட உள்ளது.உ.சிதம்பரனார், பாரதியார் ஆகியோரது தியா கங்களை நினைவுபடுத்தும் வகையில் முதல்-அமைச்சர் பல்வேறு திட்டங்களை அறி வித்துள்ளது பெருமைப் படுத்துவதாக உள்ளது. அ.தி.மு.க விவகாரம் நாட்டுக்கு முக்கியமான விச யமல்ல. அ.தி.மு.க.வில் நடப்பது உட்கட்சி விவகா ரம். அதற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் கிடை யாது. அ.தி.மு.க.வில் பல பிரிவுகளாக அவர்கள் உள்ளனர். எந்த பிரிவு சரி,  தவறு என்பது குறித்து நீதி மன்றத்தை அவர்கள் நாடி உள்ளனர். அதற்கு மேல் தேர்தல் ஆணையம் உள்ளது. இந்த ஆட்சியில் சட்டமன்றம் ஜனநாயக முறைப்படி நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். எதிர்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக அதிமுக கொறடா கொடுத்த மனு எடுக்கப்பட்ட நடவ டிக்கை என்ன என்பது சட்டப் பேரவை கூடும்போது தெரி யும். எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சரி யான முறையில் ஜனநாயக ரீதியில் முடிவுகள் இருக் கும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.

;