districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை சூறையாடிய 13 பேர் கைது!

நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை சூறையாடிய 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங் கோட்டை, நம்பிக்கை நகரைச் சேர்ந்த மதன் குமார் (வயது 28) என்பவரும், பாளையங்கோட்டை பெருமாள்புரத் தைச் சேர்ந்த உதய தாட்சாயினி (வயது 23) என்பவரும் கடந்த 6 வருடமாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில், வியாழனன்று (ஜூன் 13, 2024) திருமணம் செய்து கொண்டனர். வெள்ளியன்று (ஜூன் 14, 2024) மேலப் பாளையம் சார்பதிவாளர் அலுவல கத்தில் பதிவுத் திருமணம் செய்ய முன்பதிவு செய்திருந்தனர். 

25 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தி அராஜகம்

இதனைப் பெண் வீட்டார் தரப்பில் தடுத்த நிலையில், பாதுகாப்பு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அணு கினர். காவல்துறை அனுமதியோடு திருமணத்தை பதிவு செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி மேற்கொண்ட நிலையில் பந்தல் ராஜா மற்றும் ஜெயக் குமார் உள்ளிட்ட 25 பேர் கொண்ட கும்பல் திருநெல்வேலி, வினோபா நகரில்  உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டக்குழு அலுவலகத்திற்குள் நுழைந்து காவல்துறையினர் முன்பா கவே மேஜை, நாற்காலி, கண்ணாடி, கதவு, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர். 

இதனையடுத்து, குறிப்பிட்ட சாதி சங்கத்தைச் சேர்ந்த மாநில இளைஞரணி அமைப்பு செயலாளர் பந்தல்ராஜா, 5 பெண்கள் உட்பட 13 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;