districts

img

வாலிபர் சங்க அமைப்பு தின கொடியேற்று விழா

மதுரை, நவ. 3-  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 43-ஆம்  ஆண்டு அமைப்பு தினம் தமிழ்நாடு முழுவதும் வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்டது. மதுரையில் மத்தியப் பகுதிக் குழு, மீனாம்பாள்புரம், பழங்காநத்தம், ஜெய்ஹிந்த்புரம் பகுதிக்குழுக்கள் சார்பில் வாலிபர் சங்கக் கொடியேற்றப்பட்டது. மாவட்டத் தலைவர் அ.பாவேல் சிந்தன், செயலாளர் டி.செல்வா, பொருளாளர் எஸ்.வேல்தேவா ஆகியோர் கலந்து கொண்டனர்  பைகாரா, கார்க்கிபடிப்பகம். பெத்தானியாபுரம். சிம்மக்கல், மீனாம்பாள்புரம், ஜெய்ஹிந்த்புரம் பகுதி களில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்வில் க.கௌதம் பாரதி, விஷ்ணு, சிந்து மோகன், க.செந்தில், ஜி.கோபி, விக்னேஷ், பிரசாத், புவனேஷ், காளீஸ்வரன், குரோனி செந்தில், கஜேந்திரன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.