மதுரை, ஏப்.9- திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியின் மதுரை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து திமுக தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் மதுரையில் கோச்சடை, கோரிப் பாளையம், தெற்கு வாசல், சோலை அழகு புரம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற் கொண்டார் பிரச்சாரக் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசுகையில், ‘இருண்டு உள்ள இதய கிழக்குகள் இனி விடிய வேண்டும் என்றால் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற வேண்டி யது காலத்தின் கட்டாயம். ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே கலாச்சாரம் ஒரே பண்பாடு ஒரே ரேஷன் கார்டு ஒரே பத்திரப்பதிவு என்று இந்தியா என்கின்ற பன்முக தன்மை கொண்ட ஒரு நாடு இன்றைக்கு ஒரு சின்னஞ் சிறு சிமிலிக்குள் அடைத்திட சங் பரிவார் சக்திகள் முயற்சிக்கின்றன. பத்தாண்டுகள் ஆட்சி செய்த மோடி அவர்கள் மீண்டும் முடி சூட்டிக்கொள்ள விரும்புகிறார். முதல்வர்களை கைது செய்கிறது பாஜக அரசு. திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திர னுக்கு வாக்குக்கு பணம் கொடுப்பதற்காக இன்றைக்கு 4 கோடி ரூபாயை எடுத்துக் கொண்டு மூன்று இளைஞர்கள் தாம்பரம் சந்திப்பில் ரயில் ஏறுகிறார்கள். அந்த இளைஞர்களை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கின்றனர். 40 லட்சம் யூதர்களை கொன்று முடித்த கொலைகார ஹிட்லருக்கும் இன்றைய இந்திய நாட்டின் பிரதமருக்கும் வித்தியாசம் இல்லை. அவர்களின் சமஸ்கிருத மொழிக்கும், கலாச்சாரத்திற்கும் நாட்டு மக்களினுடைய வரிப்பணத்தை வாரி இறைக்கிறார்கள். இந்தியாவில் இருக்கின்ற மகளிர்க்கு எல்லோருக்கும் ஒரு லட்சம் ரூபாய் தருவ தாக ராகுல் காந்தி அறிவித்து இருக்கிறார். இப்படி படிப்படியாக நல்ல திட்டங்களை கொண்டு வர தமிழ்நாட்டின் தலைசிறந்த 10 எம்பிக்கள் விருது பெற்ற சு.வெங்க டேசனுக்கு வாக்களியுங்கள்’’ என்று பேசி னார். பிரச்சாரத்தில் திமுக மாநகர் மாவட்டச் செயலாளரும் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கோ.தளபதி, பெத்தா னியாபுரம் பகுதி பொறுப்பாளர் மதி வெங்க டேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு தொகுதி பொறுப்பாளர் அ.ரமேஷ், மாநிலக் குழு உறுப்பினர் க.திருச்செல் வன், சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் சிவாஜி, காங்கி ரஸ் நிர்வாகிகள் சுந்தர், காசிராஜன், மதி முக ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பி னர் மகபூப்ஜான், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் சீனி அகமது, சிபிஐ பகுதி செய லாளர் ரவிச்சந்திரன் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.