districts

img

ஏழை, எளிய மக்கள், விவசாயிகளை பாதிக்கும் மின் கட்டண உயர்வை திரும்பப் பெறுக!

திருச்சிராப்பள்ளி, செப்.12 - தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பொதுமக்களின் கருத்தை  கேட்காமல் தமிழ்நாடு மின்வாரியத் தின் கோரிக்கையை மட்டும் ஏற்று மின்  கட்டண உயர்வுக்கு ஒப்புதல் வழங்கி யுள்ளது. மின்வாரிய நட்டத்திற்கு பொது மக்கள் பொறுப்பு அல்ல. கடந்த கால  ஆட்சியின் நிர்வாக தன்மையும் தனியா ரிடம் கூடுதல் கட்டணத்திற்கு மின்சா ரத்தை வாங்கியதுமே இதற்கு காரணம்.  மேலும் சொந்த மின் உற்பத்திக்கு ஏற்பாடு செய்யாமல் இந்த சுமையை ஏழை, எளிய, நடுத்தர மக்கள், வியாபாரி கள், சிறு, குறு, நடுத்தர தொழில் முனை வோர் தலையில் சுமத்துவதை கண்டித் தும் மின் கட்டண உயர்வை திரும்பப்  பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் திங்கட்கிழமை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதனொரு பகுதியாக டெல்டா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில்  கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. திருச்சியில் அரிக்கேன் விளக்கு, தீப்பந்தம் ஏந்தி நூதன போராட்டம் நடைபெற்றது. மலைக்கோட்டை பகுதிக் குழு சார்பில் ராமகிருஷ்ணா மேம்பா லம் அருகில் நடைபெற்ற போராட்டத் திற்கு பகுதிக்குழு உறுப்பினர் ரமேஷ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மலைக்கோட்டை பகுதி செய லாளர் ராமர் ஆகியோர் பேசினர்.  ஜங்சன் பகுதிக் குழு சார்பில் மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பகுதிச் செய லாளர் ரபீக்அஹமத் தலைமை வகித் தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரேணுகா, வள்ளி ஆகியோர் பேசினர். காட்டூர் பகுதிக்குழு சார்பில் அரியமங்கலம் மின் வாரிய அலுவலகம் முன்பு பகுதிக்குழு உறுப்பினர் கனல்கண் ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, பகுதிச் செயலாளர் மணிமாறன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
திருவாரூர்
திருவாரூர் பேருந்து நிலையத் தில் ஒன்றியச் செயலாளர் என்.இடும் பையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜி.ரகு ராமன், நகரச் செயலாளர் எம்.தர்ம லிங்கம், விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ஜி.பவுன்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மன்னார்குடி
மன்னார்குடி பெரியார் சிலை எதிரில்  நகரச் செயலாளர் ஜி.தாயுமானன் தலை மையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி.ரெகுபதி, சிஐடியு இணைப்பு  சங்க தலைவர்கள் த.ஜெகதீசன், ஆ.ஹரிஹரன், விவசாயிகள் சங்க  நகரச் செயலாளர் ஜி.முத்துகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.
வலங்கைமான்
வலங்கைமான் ஒன்றியம் ஆலங்கு டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என்.ராதா  தலைமை வகித்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் வி.எஸ்.கலியபெரு மாள், மாவட்ட குழு உறுப்பினர் கே.சுப் பிரமணியன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கொரடாச்சேரி ஒன்றியம் அம்மையப் பனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் டி.ஜெயபால் தலைமை வகித்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.சேகர், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.தம்புசாமி உள்ளிட் டோர் உரையாற்றினர். நன்னிலம் ஒன்றி யம் பேரளத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு ஒன்றியச் செயலாளர் கே.எம். லிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் ஜெ.முகமதுஉதுமான் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

;