districts

img

மின் கட்டண உயர்வை திரும்பப் பெறுக! சிபிஎம் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம்

கரூர், ஆக.18- மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற  வேண்டும், தேர்தல் அறிக்  கையில் கூறியது போல மாதந்தோறும் மின் கட்ட ணம் கணக்கெடுக்கும் முறை யை அமல்படுத்த வேண்டும்  என்பன உள்ளிட பல்வேறு கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கரூர் மாவட்டத்தில் கோரிக்கை விளக்க ஆர்ப் பாட்டம் மற்றும் மனு கொடுக்  கும் போராட்டம் நடைபெற்றது.
கரூர் மாநகரம்
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கரூர் மாந கரக் குழு சார்பில் எம்பை யடி சாலையில் உள்ள மின் வாரிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத் திற்கு மாநகரச் செயலாளர் எம்.தண்டபாணி தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் ஜோதி பாசு விளக்கிப் பேசினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆர்.ஹோச்சுமின், எஸ்.பி.ஜீவா னந்தம், மாநகரக் குழு  உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அரவக்குறிச்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரவக்குறிச்சி ஒன்றியக்குழு சார்பில் ஷா நகர் கார்னரில் பெருந்திரள் முறையீடு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு கட்சி யின் ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்  தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சி.முரு கேசன், சி.ஆர்.ராஜாமுக மது, மாவட்டக் குழு உறுப்பி னர் கே.வி.கணேசன் ஆகி யோர் விளக்கிப் பேசினர்.  ஒன்றியக்குழு உறுப்பினர் கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.