திருச்சிராப்பள்ளி, ஜன.31 - திருச்சி மாவட்டத்தில் ஒரு லட்சம் தொழிலா ளர்களின் விபரங்கள் உட்பட, தமிழகத்தில் 72 லட்சம் தொழிலாளர்களின் நல வாரிய தரவுகள் அழிந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழி லாளர்கள் பென்சன் உள்பட எந்தவித பணப்பயன்களும் பல மாதங்களாக பெற முடி யாத நிலைக்கு தீர்வு காண வேண்டும். அழிந்து போன பதிவு களை உடனடியாக மீட்டெ டுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி சிஐ டியு சார்பில் புதனன்று மாவட்ட ஆட்சியர் அலுவல கம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித் தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்க ராஜன், புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜன், மாவட்டத் தலைவர் சம்பத், மாவட்டப் பொருளாளர் பன் னீர்செல்வம், தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் செல்வி, ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர்கள் மணி கண்டன், சந்திரசேகர், மாவட் டத் தலைவர் நவமணி, சுமைப்பணி சங்க மாவட்டச் செயலாளர் சிவக்குமார், சாலை போக்குவரத்து சங்க மாவட்டச் செயலாளர் சந்தி ரன், கட்டுமான சங்க மாவட் டச் செயலாளர்கள் சந்திர சேகரன், பூமாலை, தையல் சங்க மாவட்டச் செயலாளர் பிரமிளா ஆகியோர் பேசி னர். முன்னதாக வெஸ்ட்ரி ரவுண்டானா அருகில் இருந்து புறப்பட்ட பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவல கம் அருகே நிறைவடைந்தது.