districts

img

வெண்மணி தியாகிகள் சுடர் பயணத்திற்கு டெல்டா மாவட்டங்களில் உற்சாக வரவேற்பு

திருச்சிராப்பள்ளி, டிச.7- அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 35  ஆவது அகில இந்திய மாநாடு கேரள மாநிலம் திருச்சூரில் டிசம்பர் 13 ஆம் தேதி முதல் 16 ஆம்  தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில்  ஏற்றப்பட உள்ள வெண்மணி தியாகிகள் சுடர், நாகப்பட்டினம் மாவட்டம் கீழவெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் இருந்து செவ்வா யன்று தொடங்கியது.  அகில இந்திய இணைச் செயலாளர் விஜூ  கிருஷ்ணன் தலைமையில் அகில இந்திய  துணைத்தலைவர் பிரிஜா, மாநில பொதுச் செய லாளர் சாமி.நடராஜன், மாநில துணைத்தலை வர் முகமதலி, மாநில துணைச் செயலாளர் துரைராஜ் ஆகியோரைக் கொண்ட பயணக் குழுவுடன் தொடங்கிய சுடர்பயணம், கந்தர்வ கோட்டை, தஞ்சாவூர், திருவெறும்பூர் வழியாக திருச்சி காந்தி மார்க்கெட்டிற்கு புதனன்று வந்தது. காந்தி மார்க்கெட்டில், வெண்மணி தியாகி கள் சுடர் பயணக் குழுவினருக்கு திருச்சி மாநகர் மாவட்டக் குழு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற கீழவெண் மணி தியாகிகள் நினைவு ஜோதி வரவேற்பு  கூட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்ட செயலா ளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். சங்க மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர்  தங்கதுரை, சிஐடியு மாவட்ட தலைவர் சீனிவாசன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் மணி கண்டன், மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ரேணுகா ஆகியோர் பேசினர். சுமைப்பணி சங்க மாவட்டச் செயலாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.
தஞ்சாவூர்
கீழவெண்மணி தியாகிகள் நினைவுச் சுடர் குழுவிற்கு தஞ்சாவூரில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் எஸ். கோவிந்தராஜ் தலைமையில் பட்டாசு வெடித்து,  மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. சிபிஎம் மூத்த தலைவர் என்.சீனிவாசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலை வர் பி.செந்தில்குமார், சிபிஎம் மாவட்டச் செய லாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், ஆர். கலைச்செல்வி, மாவட்டக் குழு உறுப்பினர் எம்.மாலதி, என்.குருசாமி, மாநகரச் செயலா ளர் எம்.வடிவேலன், ஒன்றியச் செயலாளர் கள் கே.அபிமன்னன் (தஞ்சாவூர்), ஏ.ராஜா (திரு வையாறு), ஏ.நம்பிராஜன் (அம்மாபேட்டை) முரளிதரன் (பாபநாசம்), சிஐடியு மாவட்டச் செய லாளர் சி.ஜெயபால், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் வசந்தி, பொதுக் காப்பீட்டு ஊழியர்  சங்கம் சத்தியநாதன், மாணவர் சங்க மாவட்டச்  செயலாளர் சந்துரு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரங்கத் தினர் கலந்து கொண்டனர்.  பூதலூர் ஒன்றியம், செங்கிப்பட்டியில் நினைவுச்சுடர் பயண குழுவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாவட்ட செயலாளர் என்.வி. கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், மாதர் சங்க மாநில செயலாளர் எஸ். தமிழ்ச்செல்வி, சிஐடியு மாவட்டச் செயலாளர் சி. ஜெயபால், சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், வடக்கு ஒன்றியச் செயலாளர் எம். ரமேஷ், விவசாயிகள் சங்க மாவட்ட பொருளா ளர் எம்.பழனி அய்யா, விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன் (தெற்கு), உதய குமார் (வடக்கு) மற்றும் ஒன்றிய தலைவர்கள் கெங்கை பாலு (தெற்கு), கே.காந்தி (வடக்கு),  வி.தொ.ச ஒன்றியச் செயலாளர் வியாகுல தாஸ், மாதர் சங்க மாவட்ட பொருளாளர் வசந்தா  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருவாரூர்
கீழவெண்மணி தியாகச் சுடர் பயணக் குழுவுக்கு திருவாரூர் மாவட்டம் சார்பாக 5 மையங் களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கச்சனத் தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு,  விவசாயிகள் சங்கம் எஸ்.எஸ்.பாலகுரு தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு  உறுப்பினர் கே.தமிழ்மணி, ஒன்றியச் செயலா ளர் வி.டி.கதிரேசன் முன்னிலை வகித்தனர். ஆலத்தம்பாடியில் சிஐடியு மாவட்ட செயலா ளர் டி.முருகையன், தலைவர் கே.என்.அனிபா,  பொருளாளர் இரா.மாலதி ஆகியோர் வரவேற்பு  அளித்தனர்.  திருத்துறைப்பூண்டி காமராசர் சிலை  அருகே கீழவெண்மணி நினைவு ஜோதியை  வரவேற்று மாபெரும் வரவேற்பு பொதுக்கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். தம்புசாமி தலைமை வகித்தார். திருத்துறைப் பூண்டி நகர்மன்ற துணைத் தலைவர் எம்.ஜெயபிரகாஷ், விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் எஸ்.முத்துசெல்வம் முன்னிலை வகித்தனர். பொதுக் கூட்டத்தில், விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய துணை பொது  செயலாளர் விஜு.கிருஷ்ணன், துணைத் தலை வர் எஸ்.கே.பிரிஜா, மாநில தலைவர் பெ.சண்முகம், மாநில பொது செயலாளர் சாமி.நட ராஜன் ஆகியோர் உரையாற்றினர். சிபிஎம் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகரா ஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செய லாளர் எம்.சேகர், மாவட்ட பெருளாளர் வி.எஸ். கலியபெருமாள் மற்றும் சிபிஎம் திருத்துறைப் பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளர் டி.வி.காரல் மார்க்ஸ், நகர செயலாளர் எம்.கோபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோட்டூரில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சி க்கு, சங்கத்தின் ஒன்றிய செயலாளர் கே.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.என். முருகானந்தம், ஒன்றிய செயலாளர் எல்.சண்முகவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட  செயலாளர் எஸ்.எம்.சலாவுதீன், மாவட்ட தலை வர் ஏ.கே.வேலவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்
புதனன்று பெரம்பலூர் வந்தடைந்த கீழ வெண்மணி தியாகிகள் நினைவு ஜோதிக்கு பெரம்பலூர் மாவட்ட எல்லையான பாடாலூ ரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பழைய  பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே அனைத்து அமைப்புகளின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் புதிய பேருந்து நிலை யம் அருகே பிரச்சாரம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள், வர்க்க வெகுஜன அமைப்பி னர் கலந்து கொண்டனர்.

;