திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் வீரசேகரன்-சுமதி இல்ல திருமண விழாவிற்கு சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் டி.வி.காரல் மார்க்ஸ் வரவேற்றார். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி, திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே.மாரிமுத்து, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினர்.