districts

ரூ.10 ஆயிரம் கையூட்டு பெற்ற விஏஓ கைது

தஞ்சாவூர், ஆக.11-  

      பட்டா மாற்றம் செய்ய தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.10 ஆயிரம் கையூட்டு வாங்கிய  கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

     தஞ்சாவூர் ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த வர் டி.இளங்கோவன். தொழிலதிபரான இவர் கல்வி நிறுவனம், மருத்துவமனை உள்ளிட்ட வற்றை நடத்தி வருகிறார். இவர் தஞ்சாவூர் அருகே குருவாடிப்பட்டியிலுள்ள மூன்று நிலவை அளவை எண்களிலுள்ள 4.50 ஏக்கர்  நிலங்களை, தனது மகன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக, தஞ்சாவூர் வட்ட அலுவ லகத்துக்கு இணையவழி மூலம் ஆகஸ்ட் 3 அன்று விண்ணப்பம் செய்தார்.

    இது தொடர்பாக குருவாடிப்பட்டி கிராம நிர்வாக  அலுவலர் வீரலட்சுமியை (32), இளங்கோவன் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வரும் அந்தோணி யாகப்பா (63) சில நாள்க ளுக்கு முன்பு அணுகினார். அப்போது, ஒவ்வொரு நிலவை அளவை எண்ணுக்கும் தலா  ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.30 ஆயிரம் கையூட்டாக தர வேண்டும் என வீரலட்சுமி கூறி யுள்ளார்.

    இத்தொகையைக் கொடுக்க முடியாது எனக்  கூறிய அந்தோணி யாகப்பாவிடம், வீரலட்சுமி ரூ.25 ஆயிரம் கொடுக்குமாறும், முதல் கட்ட மாக ரூ.10 ஆயிரம் தருமாறும், தஞ்சாவூர் வட்டாட் சியர் அலுவலக வளாகத்திலுள்ள இ-சேவை மையத்துக்கு வருமாறும் தெரிவித்துள்ளார்.

    கையூட்டு கொடுக்க விரும்பாத அந்தோணி யாகப்பா, தஞ்சாவூர் ஊழல் தடுப்பு மற்றும் கண் காணிப்பு காவல் பிரிவு அலுவலகத்தில் வியா ழக்கிழமை புகார் செய்தார். இதன் பேரில் காவல் துணைக் கண்காணிப்பாளர் (பொ) நந்தகோ பால், ஆய்வாளர்கள் சரவணன், அருண் பிரசாத் உள்ளிட்டோர் தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள இ-சேவை மையத்தில் வியாழக்கிழமை இரவு மறைந்தி ருந்து கண்காணித்தனர்.

   அப்போது, அங்கு சென்ற அந்தோணி யாகப்பாவிடமிருந்து வீரலட்சுமி ரூ.10 ஆயிரம் வாங்கினார். இதைப் பார்த்த ஊழல் தடுப்பு காவல் பிரிவினர் உடனடியாக வீரலட்சுமியை கைது செய்தனர்.