districts

img

தாண்டவன்குளத்தில் எழுப்பப்படும் தீண்டாமை சுவர் தீண்டாமை ஒழிப்பு முன்னணி முற்றுகைப் போராட்டம்

மயிலாடுதுறை, அக்.31 - மயிலாடுதுறை மாவட்டம் கொள் ளிடம் ஒன்றியம் தாண்டவன்குளம் ஊராட்சியில் எழுப்பப்படும் தீண் டாமை சுவரை தடுத்து நிறுத்தக் கோரி  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சீர்காழி கோட்டாட் சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு திங்கட்கிழமை மாபெரும் போராட்டம் நடைபெற்றது. அமைப்பின் மாவட்ட தலைவர் சி.மேகநாதன் தலைமையில் நடை பெற்ற போராட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல் ராஜ், மாநில செயலாளர் பழ.வாஞ்சி நாதன், சிபிஎம் மாவட்ட செயலா ளர் பி.சீனிவாசன், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்ட செய லாளர் எஸ்.துரைராஜ், அமைப்பின்  மாவட்ட செயலாளர் எஸ்.இளங்கோ வன், விவசாய தொழிலாளர் சங்க  மாவட்ட செயலாளர் ஜி.ஸ்டாலின், அமைப்பின் மாவட்ட பொருளா ளர் ஏ.ஆர்.விஜய், ஒன்றிய செய லாளர்கள் கேசவன் (கொள்ளிடம்), அசோகன் (சீர்காழி), விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் செல் லப்பா ஆகியோர் உரையாற்றினர். சிபிஎம், விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், மாதர் சங்கம், வாலிபர், மாணவர் சங்கம் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கொள்ளிடம் அருகேயுள்ள தாண் டவன்குளம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் சுமார் 120-க்கும் மேற் பட்ட பட்டியல் வகுப்பு குடும்பங் களைச் சேர்ந்தவர்கள் வசித்து வரு கின்றனர். அந்த குடியிருப்பு பகு தியை ஒட்டி இருந்த நிலத்தில், ‘சாந்தி நகர்’ என்ற பெயரில் சிதம் பரம் அருகேயுள்ள வல்லம்படு கையை சேர்ந்த டைல்ஸ் இராஜேந் திரன் என்பவர் வீட்டு மனைகளை (பிளாட்டுகள்) அமைத்துள்ளார்.  

போதுமான இடவசதியின்றி நெரி சலுடன் குடியிருப்புகளில் வசிக்கும்  அண்ணா நகரை சேர்ந்த   பட்டியல்  வகுப்பு மக்கள் சாந்தி நகரில் வீட்டு மனையை விலைக்கு கேட்டுள்ள னர். அதற்கு அவர், “உங்களுக்கு (எஸ்.சி) வீட்டுமனை கொடுத்தால் மற்றவர்கள் இங்கு மனை வாங்க மாட்டார்கள். எனவே நான் தலித்து களுக்கு வீட்டுமனை விற்பனை செய்யமாட்டேன். உங்கள் தெருவை  மறைத்தால்தான் மற்றவர்கள் இங்கு  மனை வாங்குவார்கள். உங்கள் தெருவை மறைக்க சுவர் எழுப்ப வேண்டும்” என்று சாதிய வன் மத்தோடு பேசியுள்ளார். மேலும், சில நாட்களிலேயே சுமார் 8 அடி உயரத்தில் தீண்டாமை சுவரை எழுப்பியுள்ளார். பட்டியல் வகுப்பு மக்கள் காலம்காலமாக பயன் படுத்தி வந்த அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் 6 அடி அகலம், 500 மீட்டர் நீளம் கொண்ட பொதுப் பாதை யையும் அராஜகமாக அடைத்துள் ளார். இந்த பட்டியல் வகுப்பு மக்கள், அந்த பாதையின் வழியாகதான் பள்ளிக்கூடம், கோயில், ரேசன் கடை, ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு சென்று வந்த நிலையில், அந்த பாதை அடைக்கப்பட்டதால் பட்டி யல் வகுப்பு மக்கள் மிகவும் சிரமத் திற்கு ஆளாகியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு நடவ டிக்கை எடுக்கக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தியும், எந்த நடவடிக்கை இல்லை. இந்நிலையில் தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய போராட்டத்தில் அண்ணாநகர் சுந்தரம் பிள்ளைத் தெரு, சித்தி விநாயகர் தெரு, புளியந்துறை, புதுத்தெரு  ஆகிய பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தீண்டாமை கொடு மைக்கு எதிராக முழக்கமிட்டனர். சாந்தி நகரில் எழுப்பப்படும் தீண்டாமை சுவரை தடுத்து நிறுத்த வேண்டும். தலித்துகளுக்கும் மனை களை விற்பனை செய்ய வேண்டும்.  தீண்டாமை சுவர் கட்டுமானப் பொருட் களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுப் பாதையை மீட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர  வேண்டும். சாதிய வன்மத்துடன், நவீன முறையில் தீண்டாமையை கடைப்பிடிக்கும் சாந்தி நகர் உரி மையாளர் டைல்ஸ் இராஜேந்திரன் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட காலமாக குடி யிருப்பு மனையில்லாத உபரி குடும் பங்களுக்கு ஆதிதிராவிடர் நலத்  துறை மூலம் நிலத்தை கையகப் படுத்தி வீட்டுமனை வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இப்போராட்டம் நடை பெற்றது.  உடனடியாக நடவடிக்கை இல்லையெனில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்திக்  கொண்டே இருப்போம் எனக் கூறி,  கோரிக்கைகள் அடங்கிய மனுக் களை அமைப்பின் நிர்வாகிகள் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் உ. அர்ச்சனாவிடம் அளித்தனர்.

;