இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்காத, ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் செங்கம் அடுத்த இறையூர் கிராமத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார செயலாளர் சேதுராமன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சிஎம்.பிரகாஷ், முன்னாள் மாவட்ட செயலாளர் எ.லட்சுமணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.