districts

img

வேளாண் விரோத  சட்டங்களை மீண்டும் புதிய வடிவில் கொண்டுவர முயற்சி!  

மூன்று வேளாண் சட்டங் ங்களுக்கு எதிராக ஐக்கிய விவசாயிகள் முன்னணி (எஸ்.கே.எம்) டெல்லி நுழைவு எட்டு வழி சாலைகளில் எழுச்சியுடன் துவங்கி நடந்த விவசாயிகளின் போராட் டத்தை முறியடிக்க பல்வேறு வழி களை ஒன்றிய அரசு கையாண்டது.  சில நபர்களைக் கொண்டு உச்சநீதிமன்றத்தில் போக்குவரத்து பாதிப்புஎன மனு தாக்கல் செய்த நிலையில், போராடும் சங்கத் தலை வர்களை உச்சநீதிமன்றம் அழைத்தது. ஒன்றிய அரசு எடுத்த புதிய வேளாண் கொள்கை இது. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என முதலிலேயே நீதிமன்றம் சொல்லி விட்ட நிலையில் நாங்கள் வந்து பயன் என்ன என்று விவசாய சங்கத் தலைவர்கள் மறுத்துவிட்டார்கள்.  அதன்பின் இந்த சட்டங்களால் விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை பற்றி மட்டுமே கருத்துக்கேட்க நான்கு பேர் கொண்ட கமிட்டியை அமைத்தது. இக்கமிட்டியின்  உறுப்பி னர்களாக மகாராஷ்டிராவில் உள்ள ஒரு சங்கத்தின் பொறுப்பாளர் ஒன்றிய அரசின் ஓய்வு பெற்ற உயர் அலுவலர், தொண்டு நிறு வனத்தின் பொறுப்பாளர் என ஒன்றிய அரசு தான் இக் கமிட்டியின் பெயர்களை பரிந்துரை செய்து அமைத்தது. இக்கமிட்டியில் உள்ளோர் அரசின் ஆதரவாளர்கள் என அப்போதே எஸ்.கே.எம் அறிவித்துவிட்டது.  பின்னர் இதில் இடம்பெற்றிருந்த ஒருவர் என்னால் செயல்பட இயலாது என சொல்லி தொடக்கத்திலேயே விலகிவிட்டார்.

இதன்பின் மூவர் கமிட்டி விசாரித்து முடித்ததாக ஒரு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் ஒரு ஆண்டிற்கு முன்னாலயே கொடுத்து விட்டது.  வேளாண் விரோத சட்டங்களை ஒன்றிய அரசு சட்டப் பூர்வமாக திரும்பப் பெற்று விட்ட நிலையில் இந்த அறிக்கையை நீதிமன்றம் வெளியிடாமல் நிறுத்தி வைத்துவிட்டது. அந்தஅறிக்கையைத் தான்சுப்ரீம்கோர்ட் நியமித்த கமிட்டியின் ஒரு உறுப்பினர் கென்வட் அண்மையில். பொது வெளியில் செய்தியாளர்களை சந்தித்து விவரித்துள்ளார்.... இந்த சட்டங்களை 87 சதவீதம் பேர் ஆதரித்துள்ளனர். 13 சதவீதம் பேர் மட்டுமே எதிர்த்துள்ளனர். அதாவது 3.8 கோடி விவசாயிகளை உள்ளடக்கிய  சங்கங்கள் ஆதரித்துள்ளன. கருத்து கேட்டது என்பது சங்கப் பிரதிநிதிகளிடம் நேரடியாக, இணையவழி மூலம், இமெயில் வழியாக, ஆதாரங்களின் அடிப்படை என 4 வகைகளில் கருத்து அறியப்பட்டதாக சொல்கிறார். 500க்கும் மேற்பட்ட சங்கங்கள் நாடு தழுவிய அளவில் பல மாதங்களாக உறுதியுடன் போராடி வந்த நிலையில் இவர்களின்  கருத்தறியாது இதுவெளியிடப்பட்டு இருக்கிறது. வேளாண்மை தரகர்கள்... கமிசன் வியாபாரிகள்.. தொண்டு நிறுவனங்கள்.. ஓய்வு பெற்றஅரசுஉயர் அலுவலர்கள் என      வேளாண்மையில் நேரடியாக ஈடுபடாதவர்களிடம் இக்கருத்துக்கள் அறியப்பட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்றம் கொடுக்காத பணியை... தானே செய்ததன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளார்.

வேளாண்உற்பத்தி பொருட்களுக்கு ஒன்றிய அரசு குறைந்த பட்ச ஆதாரவிலை (எம்.எஸ்.பி).. நிர்ணயம் செய்யவேண்டிய அவசியமில்லை. அரசு கொள்முதல் தேவையில்லை. அரசு உணவு பொருட்களைவாங்கி இருப்பு வைக்க  வேண்டியதில்லை. பொதுவிநியோக அங்காடிகளை (பி.டி.எஸ். )மூடிவிடலாம். மானியத்தை நேரடியாக அவரவர்கள் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி விடலாம்எனவும் கருத்து தெரிவித்து உள்ளார். நீதிமன்றம் கேட்காதவற்றை அதிகப் பிரசங்கித்தனமாகச் செய்துள்ளார்.  3 வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது மாபெரும் தவறு எனவும்கவலையுடன் கூறியதுடன்... மீண்டும் இந்த சட்டங்களை கொண்டுவர வலியுறுத்தி செப்டம்பர் மாதத்தில் டெல்லியில் பல்லாயிரம்பேர்கள் பங்கு கொள்ளும் பேரணி நடத்தப் படும் என்றும் இறுதியில் அறிவித்துள்ளார். தற்போது அரசு கொள்முதல் பெயர்அளவிற்காவது இருப்பதால் தான் விவசாயிகளுக்குகொஞ்சம் பாதுகாப்பு கிடைப்பதுமட்டுமல்ல.. இதனால்தான் ஏழை, எளிய நடுத்தர மக்கள் ஓரளவு பட்டினி இல்லாமல் சாப்பிட்டு உயிர்வாழ்கிறார்கள்.

இவர்களின் உணவை பறித்து பட்டினி போட்டு சாகடிக்க வேண்டும் எனஅவர்கூறுகிறார் போலும்.  சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு மானியம் சரிவர இதுவரை வந்ததுண்டா..? வழங்கப்பட்ட மானியங்கள் நாளடைவில் குறைந்து.. மறைந்துபோயுள்ளதே.. எரிவாயு சிலிண்டர் மானியம் போல... தற்போது வரை நெல், கோதுமையை மட்டுமே ஒன்றிய அரசு விவசாயிடம் கொள்முதல் செய்கிறது.. அதுவும் ஒவ்வொரு ஆண்டும் 6 சதவீதம் அளவில்தான். எஞ்சியவைகளை  தனியாரிடம் மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்து... ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்து வருகிறார்கள்விவசாயிகள்.  தனியார்களின்  கொள்ளை லாப வேட்டைக்கு விடவே இக்கமிட்டி விரும்புவதாக தெரிகிறது.. இக்கமிட்டியின் செயல்பாடுகள் பல கேள்விகளை எழுப்புகிறது..... உச்சநீமின்றம் கேட்டது இந்த சட்டங்களால் விவசா யிகளுக்கு என்ன பாதிப்பு என தானே...? அதற்கு பதில் சொல்ல வேண்டிய இக்கமிட்டி புதியதிட்டங்களை ஆலோசனைகளை.. நீதிமன்றம் கேட்காத.. இவர்களின் சொந்த கருத்துக்களை கொடுக்கலாமா..?  இது உச்சநீதிமன்றம் உத்தரவை மீறிய செயல் ஆகாதா..

எந்த அமைப்பு ஆய்வறிக்கை கேட்கிறதோ.. அந்த அமைப்பு நீதிமன்றம், தான்இதன்அறிக்கையை வெளியிட முடியும்.. விவாதிக்க முடியும்.. அந்தமன்றமே அவசியமில்லை என இருக்கிற போது, இக்கமிட்டி பொதுவெளியில் இதை வெளியிடுவது நீதி மன்றத்தை மீறிய செயல் ஆகாதா..? இப்படி நீதிமன்றங்கள் அமைக்கும் விசாரணை கமிட்டிகள்.. தன் விருப்பத்திற்கு வெளியிடுவதும் தன் கருத்துக்களை நீதிமன்ற அங்கீகாரதுணையோடு வெளியிடுவதும் பொது அமைதிக்கு பங்கம்ஏற்படாதா? நீதி பரிபாலனம் புரியும் அமைப்புகள் நெறிதவறும் இந்த செயலுக்குரிய நடவடிக்கையை எடுத்திட வேண்டாமா?  ஒன்று உறுதியாக தெரிகிறது. இந்த சட்டங்கள் திரும்பப் பெறப்பட்ட பின் ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்கள் கூறியதை கவனத்தில் கொள்ள வேண்டும்.  திரும்பப் பெறப்பட்ட வேளாண் சட்டங்கள் மறு வடிவில் மீண்டும் கொண்டுவரப்படும் என்று அவர் கூறியதற்கு... பொது மக்களின் ஆதரவை பெற்றிடவே.. இக்கமிட்டியின் மூலம் புதிய சட்டங்களுக்கான திறவுகோலாக இது வெளியிடப்பட்டதாக தெரிகிறது. உச்சநீதிமன்ற பின்புறவழியை.. நாடாளும் அவைகளின் நுழைவுவழிகளாய் வைத்து புதிய வேளாண் விரோத சட்டங்களை பிரசவிக்கத் துடித்தால் முறியடித்திட முன்னைவிட தீவிரமாகும் விவசாயிகளின்எழுச்சி..

கட்டுரையாளர் : தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்