districts

திருச்சி விரைவு செய்திகள்

விவசாயிகள் சங்க  திருவாரூர் ஒன்றிய மாநாடு  

திருவாரூர், மே 31 -  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 26வது திருவாரூர் ஒன்றிய மாநாடு புலிவலத்தில் மாவட்ட தலைவர் வி.ஜெயபால் தலைமையில் நடைபெற்றது. மாநில தலைவர் சுப்பிரமணியன் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். மாவட்ட செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள், மாவட்ட தலைவர் எஸ்.தம்புசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தலைவராக ஆர்.எஸ்.சுந்தரய்யா, செயலாளராக ஜி.பவுன்ராஜ், பொரு ளாளராக சக்திவேல், துணை தலைவராக வி.ஜெயபால், துணை செய லாளராக கணேசன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட னர்.


உலக புகையிலை தின விழிப்புணர்வு பிரச்சாரம்

திருச்சிராப்பள்ளி, மே 31 - உலக சுகாதார அமைப்பு ஆண்டுதோறும் மே 31 ஆம் தேதியை உலக  புகையிலை தினமாக கடைபிடித்து வருகிறது. இதையொட்டி ஹர்ஷ்மித்ரா மருத்துவமனை மற்றும் ரோஸ் கார்டன் அறக்கட்டளை இணைந்து புகையிலையினால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதனால் ஏற்படும் புவி மாசுபடுதல் குறித்த விழிப்புணர்வை கடந்த 12 ஆண்டு களாக ஏற்படுத்தி வருகிறது.  இந்த ஆண்டும் இயற்கையை காப்போம் என்ற கருப்பொருளை மையமாக வைத்து திருச்சி நாகமங்கலத்தில் உள்ள ஹர்ஷ்மித்ரா மருத்து வமனையில் விழிப்புணர்வு நாடகங்கள், நடனங்கள் மற்றும் வாகன பிரச்சாரம் நடைபெற்றது. மருத்துவமனை நிர்வாக இயக்குனரும், புற்று நோய் அறுவை சிகிச்சை நிபுணருமான மரு.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். பின்னர் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மேயர் அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, டாக்டர் சசிப்பிரியா கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.   


பைக்கில் மணல் மூட்டை  கடத்திய 4 பேர் கைது

கும்பகோணம், மே 31 - திருவிடைமருதூர் காவல் துணை கண்காணிப்பாளர் அறிவுரை யின் பேரில் பந்தநல்லூர் காவல் ஆய்வாளர் ஓம் பிரகாஷ் தலைமை யில், தனிப்படை போலீசார் பந்தநல்லூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட  பகுதியில் மணல்திருட்டு, சாராயம், கஞ்சா, பான்பராக் உள்ளிட்ட புகை யிலை வைத்திருத்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில் திட்டச்சேரி கொள்ளிடம் ஆற்றங்கரை வவ்வா தோப்பு அருகில் மணகுண்ணம்  பன்னீர் (38), சிவக்குமார் (35), திட்டச் சேரி பழனி (48), வேட்டமங்கலம் மணிவாசகம் (22), ஆகிய நான்கு பேர் ஒவ்வொரு இருசக்கர வாகனங்களிலும் மணல் மூட்டைகளை வைத்து, பந்தநல்லூர் நோக்கி வந்து கொண்டனர். தனிப்படையினர் இவர்களை பிடித்து, 4 பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற காவலுக்கு ஆஜர்படுத்தினர்.


சாலை நடுவே வாகனங்கள்: போக்குவரத்து பாதிப்பு

அரியலூர், மே 31- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் திருச்சி - சிதம்பரம் சாலை யில் தனியார் டீ கடை மற்றும் சிக்கன் கடை முன்பு ஏராளமான இரு சக்கர வாகனங்களை சாலையின் ஓரமாக நிறுத்தாமல், சாலை நடுவே  நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அவ்வழியாக வரும் வாகன ஓட்டி கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.  வாகனங்கள் நடுவே நிற்பதால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்படுகிற சம்பவமும் நடந்துள்ளது. எனவே சாலை நடுவே நிற்கிற 2  சக்கர வாகனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து வாகன ஓட்டி களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த காவல்துறை நடவ டிக்கை எடுக்க வேண்டும் என ஜெயங்கொண்டம் பகுதி மக்கள் எதிர் பார்க்கின்றனர். 


பட்டப்பகலில் பைக் திருட்டு

அரியலூர், மே. 31- ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் தண்டரை கிரா மம் வெட்டி தெருவைச் சேர்ந்த மாரிமுத்து (27) விவசாய கூலித் தொழி லாளியான இவர், தனது வீட்டின் முன்பு உள்ள காம்பவுண்டுக்கு வெளியே  தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மீண்டும் மதியம் 2 மணி  அளவில் வந்து பார்த்தபோது காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாரிமுத்து அக்கம்பக்கத்தில் எங்கு தேடியும் கிடைக்காததால் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.


பொன்னேரியை சுற்றுலா தலமாக மாற்ற வலியுறுத்தல்

அரியலூர், மே 31- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜெயங்கொண்டம், ஆண்டி மடம் ஒன்றிய 9-வது மாநாடு தனியார் திருமண மண்டபத் தில் நடைபெற்றது. ஒன்றிய துணை செயலாளர் ராஜா பெரியசாமி தலைமை வகித்தார். மாநாட்டை சிபிஐ மாநில  நிர்வாகக்குழு மணிவாசகம், அரியலூர் மாவட்ட செயலா ளர் உலகநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  பல்வேறு தனியார் நிறுவனங்கள் பொதுமக்களை பணம்  கட்ட சொல்லி அச்சுறுத்துவதற்கும், அடியாட்களை கொண்டு  மிரட்டுவதற்கும் கண்டனம் தெரிவித்து பேசப்பட்டது. ஆண்டி மடத்தில் குற்றவியல் மற்றும் சார்பு நீதிமன்றம், மகளிர் காவல் நிலையம் தீயணைப்பு நிலையம் அமைத்து தர வேண்டும். வாரியங்காவல் ஊராட்சியில் தமிழக அரசு வழங்கிய  இலவச வீட்டு மனையில் வீடு கட்டி வசித்து வரும் 112 குடும்பங்க ளுக்கு வருவாய்த்துறை மூலம் குடிமனைப் பட்டா வழங்க வேண்டும். தமிழக அரசு கங்கைகொண்ட சோழபுரத்தில் 750  ஏக்கர் பரப்பளவு கொண்ட பொன்னேரி என்கின்ற சோழ கங்கத்தை ஆழப்படுத்தி படகு வசதியுடன் சுற்றுலாத்தல மாக அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.


தொழில்நுட்ப போட்டிகள்

பாபநாசம், மே 31 - பாபநாசம் ஆர்.டி.பி. கலை, அறிவியல் கல்லூரியில் கணினி துறை சார்பில் பல்வேறு கல்லூரிகளுக்கு இடை யிலான கலை, தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகள் நடந்தன.  துணை முதல்வர் தங்கமலர் வரவேற்றார். கல்வி நிறுவன தலை வர் தாவூத் பாட்சா தலைமை வகித்தார். இதில் 15 கல்லூரி களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற னர். சிறப்பு விருந்தினராக விஜய் டிவி குக் வித் கோமாளி அருண் பங்கேற்று போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர் களுக்கு பரிசுகளை வழங்கினார்.


 

;