districts

திருச்சி முக்கிய செய்திகள்

பிரபல ரவுடி மர்ம சாவு: கண்மாயில் மிதந்த உடல் மீட்பு!

தூத்துக்குடி,டிச.27 எட்டயபுரத்தில் கண்மாயில் மிதந்த பிரபல ரவுடியின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி கிராமம், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் மாடசாமி மகன் பூமிராஜ் (52). லாரி டிரைவரான இவர் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளனர். எட்டைய புரம் காவல் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் உள்ளார். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி முதல் பூமிராஜை காணவில்லை. இதுகுறித்து அவரது தம்பி கருப்பசாமி (31) என்பவர் எட்டய புரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஜிந்தா பீர்முகம்மது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் ஞாயிறு மாலை, பூமிநாதன் முத்துலா புரம் கண்மாயில் இறந்து கிடந்தார். உடல அழுகிய நிலையில், கை - கால்க ளில் எலும்புகள் நொறுங்கி நிலையில் காணப்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்து எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக எட்டையாபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், பூமிராஜின் மனைவி மற்றும் உறவினர்கள் எட்டயபுரம் காவல் நிலையத்தை திங்களன்று  காலை முற்றுகையிட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, பிரேத பரிசோதனைக்கு பின் அவரது சாவு குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். 

தூத்துக்குடியில் பல வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கைது!

தூத்துக்குடி,டிச.27 தூத்துக்குடியில் கொலை, கொலை முயற்சி உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுபடி, நகர காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சம்பத் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் போலீசார் ஞாயி றன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது பிரையண்ட்நகர் 10வது தெரு அருகே  சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்  அண்ணா நகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கண்ணன் (எ) வள்ளியூரான் கண்ணன் (40) என்பதும், அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இது குறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட கண்ணன் மீது தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலை யத்தில் கொலை மிரட்டல் உட்பட 3 வழக்குகளும், வடபாகம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 2 வழக்குகளும், மத்தியபாகம் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும், திருநெல் வேலி மாவட்டம் நாங்குநேரி காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் என மொத்தம் 8 வழக்குகள் உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

திருக்கடையூர் பிரச்சனை: இன்று முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

மயிலாடுதுறை, டிச.27 - மயிலாடுதுறை மாவட்டம் திருக்க டையூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்  சார்பில் 7 ஆவது நாளாக தொடர் காத்தி ருப்பு போராட்டம் நடைபெற்றது. இரவு பகலாக கடுங்குளிரிலும் நடைபெறும் போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள், மார்க்சிஸ்ட் கட்சியினர் கலந்துக் கொண்டு மாவட்ட நிர்வாகத்தையும், தருமபுரம் ஆதீனத்தையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.  போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆக்கூர் ஊராட்சி மன்ற தலைவரும், விவசாயியுமான ஏ.ஆர்.சந்தி ரமோகன் ரூ.7 ஆயிரம் மதிப்பிலான அரிசி மூட்டை, காய்கறிகள், மளிகைப் பொ ருட்களை போராட்ட குழுவிடம் வழங்கினார்.  7 நாட்களாகியும் அதிகாரிகள் கண்டு  கொள்ளாததால் செவ்வாய்க்கிழமை முதல் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை யிட்டு தொடர் காத்திருப்பு போராட் டத்தில் விவசாயிகள் ஈடுபடவுள்ளனர்.

பறவை காய்ச்சல் எதிரொலி  புளியரை சோதனை சாவடியில் கண்காணிப்பு பணி தீவிரம்

திருநெல்வேலி, டிச .27- கேரளாவில் ஒமைக்ரான் மற்றும் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதன் எதிரொலியாக தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனை சாவடியில் அனைத்து துறை சார்பில் முன் னெச்சரிக்கை தடுப்பு நடவ டிக்கைகள் மற்றும் வாகனங்க ளுக்கு மருந்து தெளிக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. தற்போது தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் மாலை அணிந்து கேரள மாநிலம் சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று வருகின்றனர். மேலும் புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட தொடர் பண்டிகை விடுமுறை நாட்களை கொண்டாடவும் அண்டை மாநில மான கேரளாவுக்கு ஏராளமா னோர் புளியரை வழியாக சென்று வருகின்றனர். இதனால் புளியரையில் காவல்துறை, சுகாதாரத்துறையினர் தீவிர சோதனைகளுக்கு பின்னரே வாகன ஓட்டிகளை செல்ல அனு மதிக்கின்றனர்.மேலும் 2 தவணை தடுப்பூசி போட்டதற் கான சான்றிதழ், 75 மணி நேரத்தி ற்கு முன்னர் கொரோனா தொற்று குறித்த பரிசோதனையை அர சால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோ தனை மையங்களில் செய்த தற்கான சான்று ஆகியவற்றை ஆராய்ந்த பின்னர்தான் அனு மதிக்கப்படுகின்றனர். மேலும் கொரோனா தொற்று சான்று இல்லாதவர்களுக்கு அங்கேயே சுகாதாரத்துறையினர் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களின் முழு விபரங்கள் சேகரிக்கப்பட்டு 15 நாட்கள் தனிமையில் இருக்க அறிவுரை வழங்குவதுடன் அந்தந்த பகுதி சுகாதார மேற் பார்வையாளர் நேரடி கண்கா ணிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.இதேபோன்று கேரளாவில் இருந்து கோழி, வாத்துகளை ஏற்றிவரும் வாகனங்கள் அனைத்திற்கும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக கால்நடை மருத்துவர் ஒருவர் மேற்பார்வையில் மருத்துவ குழு வினர் பணியாற்றி வருகின்றனர்.

வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க முறைகேடுகள்  நடவடிக்கை எடுக்க விவசாயிகள் மனு

பிரபல ரவுடி மர்ம சாவு: கண்மாயில் மிதந்த உடல் மீட்பு!  தூத்துக்குடி,டிச.27 எட்டயபுரத்தில் கண்மாயில் மிதந்த பிரபல ரவுடியின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி கிராமம், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் மாடசாமி மகன் பூமிராஜ் (52). லாரி டிரைவரான இவர் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளனர். எட்டைய புரம் காவல் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் உள்ளார். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி முதல் பூமிராஜை காணவில்லை. இதுகுறித்து அவரது தம்பி கருப்பசாமி (31) என்பவர் எட்டய புரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஜிந்தா பீர்முகம்மது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் ஞாயிறு மாலை, பூமிநாதன் முத்துலா புரம் கண்மாயில் இறந்து கிடந்தார். உடல அழுகிய நிலையில், கை - கால்க ளில் எலும்புகள் நொறுங்கி நிலையில் காணப்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்து எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக எட்டையாபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், பூமிராஜின் மனைவி மற்றும் உறவினர்கள் எட்டயபுரம் காவல் நிலையத்தை திங்களன்று காலை முற்றுகையிட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, பிரேத பரிசோதனைக்கு பின் அவரது சாவு குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.   தூத்துக்குடியில் பல வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கைது!  தூத்துக்குடி,டிச.27 தூத்துக்குடியில் கொலை, கொலை முயற்சி உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுபடி, நகர காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சம்பத் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் போலீசார் ஞாயி றன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது பிரையண்ட்நகர் 10வது தெரு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அண்ணா நகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கண்ணன் (எ) வள்ளியூரான் கண்ணன் (40) என்பதும், அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இது குறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட கண்ணன் மீது தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலை யத்தில் கொலை மிரட்டல் உட்பட 3 வழக்குகளும், வடபாகம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 2 வழக்குகளும், மத்தியபாகம் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும், திருநெல் வேலி மாவட்டம் நாங்குநேரி காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் என மொத்தம் 8 வழக்குகள் உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.  திருக்கடையூர் பிரச்சனை: இன்று முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்  மயிலாடுதுறை, டிச.27 - மயிலாடுதுறை மாவட்டம் திருக்க டையூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 7 ஆவது நாளாக தொடர் காத்தி ருப்பு போராட்டம் நடைபெற்றது. இரவு பகலாக கடுங்குளிரிலும் நடைபெறும் போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள், மார்க்சிஸ்ட் கட்சியினர் கலந்துக் கொண்டு மாவட்ட நிர்வாகத்தையும், தருமபுரம் ஆதீனத்தையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆக்கூர் ஊராட்சி மன்ற தலைவரும், விவசாயியுமான ஏ.ஆர்.சந்தி ரமோகன் ரூ.7 ஆயிரம் மதிப்பிலான அரிசி மூட்டை, காய்கறிகள், மளிகைப் பொ ருட்களை போராட்ட குழுவிடம் வழங்கினார். 7 நாட்களாகியும் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் செவ்வாய்க்கிழமை முதல் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை யிட்டு தொடர் காத்திருப்பு போராட் டத்தில் விவசாயிகள் ஈடுபடவுள்ளனர்.  பறவை காய்ச்சல் எதிரொலி புளியரை சோதனை சாவடியில் கண்காணிப்பு பணி தீவிரம்  திருநெல்வேலி, டிச .27- கேரளாவில் ஒமைக்ரான் மற்றும் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதன் எதிரொலியாக தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனை சாவடியில் அனைத்து துறை சார்பில் முன் னெச்சரிக்கை தடுப்பு நடவ டிக்கைகள் மற்றும் வாகனங்க ளுக்கு மருந்து தெளிக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. தற்போது தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் மாலை அணிந்து கேரள மாநிலம் சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று வருகின்றனர். மேலும் புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட தொடர் பண்டிகை விடுமுறை நாட்களை கொண்டாடவும் அண்டை மாநில மான கேரளாவுக்கு ஏராளமா னோர் புளியரை வழியாக சென்று வருகின்றனர். இதனால் புளியரையில் காவல்துறை, சுகாதாரத்துறையினர் தீவிர சோதனைகளுக்கு பின்னரே வாகன ஓட்டிகளை செல்ல அனு மதிக்கின்றனர்.மேலும் 2 தவணை தடுப்பூசி போட்டதற் கான சான்றிதழ், 75 மணி நேரத்தி ற்கு முன்னர் கொரோனா தொற்று குறித்த பரிசோதனையை அர சால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோ தனை மையங்களில் செய்த தற்கான சான்று ஆகியவற்றை ஆராய்ந்த பின்னர்தான் அனு மதிக்கப்படுகின்றனர். மேலும் கொரோனா தொற்று சான்று இல்லாதவர்களுக்கு அங்கேயே சுகாதாரத்துறையினர் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களின் முழு விபரங்கள் சேகரிக்கப்பட்டு 15 நாட்கள் தனிமையில் இருக்க அறிவுரை வழங்குவதுடன் அந்தந்த பகுதி சுகாதார மேற் பார்வையாளர் நேரடி கண்கா ணிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.இதேபோன்று கேரளாவில் இருந்து கோழி, வாத்துகளை ஏற்றிவரும் வாகனங்கள் அனைத்திற்கும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக கால்நடை மருத்துவர் ஒருவர் மேற்பார்வையில் மருத்துவ குழு வினர் பணியாற்றி வருகின்றனர்.  வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க முறைகேடுகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் மனு  தூத்துக்குடி,டிச.27 தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா அங்கமங்கலம் கிராமம் குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சுமார் 2 கோடி அளவிற்கு நகைகள் மற்றும் பல கோடி ரூபாய்க் கான வைப்பு தொகைகளை வங்கியின் செயலாளர் மற்றும் துணைச் செயலாளர் ஆகியோர் மோசடி செய்து கையாடல் செய்துள்ளனர். இதனால் குரும்பூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு வங்கியிலிருந்து நகைகள் திரும்ப வழங்கப்பட வில்லை. இதனால் விவசாயி களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து உடனடி யாக நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இது தொடர்பான மனுவினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சி யர் செந்தில்ராஜிடம்வழங்கினர். இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கூட்டுறவு கடன் சங்க செயலாளர் மீது நடவடிக்கை கோரி மனு

தூத்துக்குடி,டிச.27  கீழமங்கலம் கூட்டுறவுகடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க மறுக்கும் செயலாளர் மீது நட வடிக்கை எடுக்க  கோரி ஆட்சியர் அலுவல கத்தில்விவசாயிகள் மனு அளித்தனர். இது தொடர்பாக கீரமங்கலம் பகுதி விவ சாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதா வது: தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் உள்ள கீழமங்கலம் கூட்டுறவு கடன் சங்கத்தில் தற்போது பணிபுரிந்து வரும் செயலர் பயிர்க் கடன் வழங்குவ தற்காக மேற்படி கூட்டுறவு சங்கத்திற்கு ரூபாய் 10 லட்சம் மட்டுமே ஏற்பட்டுள்ளதா கவும் அதனால் அனைத்து விவசாயிக ளுக்கும் பயிர் கடன் வழங்க இயலாது என  சொல்லி பயிர்கடன் சம்பந்தமான ஆவ ணங்களை பெறாமல் விவசாயிகளை திருப்பி அனுப்பி விடுகிறார். ஆனால் தனக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் வேண்டிய நபர்களிடம் மட்டுமே பயிர் கடன் வழங்க ஆவணங்களை பெற்று வருகிறார் இதனால் தமிழக அரசால் விவசாயிகள் பயிர் கடன் பெற காலநீட்டிப்பு செய்தும் செயலாளரின் இந்த செயலால் விவசாயிகள் கடன் பெற முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளா கின்றனர். எனவே மேற்படி கூட்டுறவு கடன் சங்கத்தில் தகுதியுள்ள அனைத்து விவசாயி களுக்கும் பயிர்கடன் வழங்கிட தாங்கள் நடவடிக்கை எடுக்கவும் பல்வேறு ஊழல் குற்றச் சாட்டில் ஈடுபட்டு தொடர்ந்து விவசா யிகள் பயன் பெற முடியாத அளவிற்கு சர்வாதிகார போக்கில் இங்கு பணிபுரிந்து வரும் செயலாளரை எவ்வித சமரசமும் இல்லாமல் காலதாமதமின்றி இடமாற்றம் செய்து கடன் சங்கத்தை காப்பாற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கீரமங்க லம் பகுதி விவசாயிகள் சார்பாக கேட்டுக் கொள்ளபடுகிறது என மாவட்ட ஆட்சியரி டம் அளித்த மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது.

 

;