districts

பேருந்துகளில் பெண்களை இழிவாக நடத்தும் நடத்துநர், ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுத்திடுக! அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 7- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க திருச்சிராப்பள்ளி மாவட்டத் தலைவர் ரேணுகா, மாவட்ட செயலாளர்  சரஸ்வதி ஆகியோர் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழக அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக செல்லலாம் என்ற சிறப்பு திட்டத்தை தமிழக அரசு அறி வித்தது. இத்திட்டம் நடுத்தர மற்றும் ஏழை-எளிய பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனை மாதர் சங்கம் வரவேற்கிறது. ஆனால் பேருந்து நிலையத்தில் அதிகமான பெண்கள் நிற்பதை பார்த்தால், சில ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அந்த நிறுத் தத்தில் பேருந்தை  நிறுத்தாமல் செல்கின் றனர். இல்லையென்றால் பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளால் திட்டி,  அநாகரிகமாக நடந்து கொள்கின்றனர்.  பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பெண் களை பேருந்தில் ஏற்றக்கூடாது என்ற  எண்ணத்தில் சிறிது தூரம் தள்ளி  நிறுத்துகின்றனர். பள்ளிக் குழந்தைகள்  புத்தக பையுடன் ஓடி போய் பேருந்தில்  ஏறும் போது கீழே விழும் சூழல் ஏற்படு கிறது. மேலும் பள்ளிக் குழந்தைகள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்வதி லும், வீடு திரும்புவதிலும் மிகுந்த சிரம மும், காலதாமதமும் ஏற்படுகிறது. இத னால் அவர்களுக்கு ஏதாவது விபரீதம் நடந்து விடுமோ என்ற கவலையும், அச்ச மும் பெற்றோருக்கு உள்ளது.  இதேபோல் வயது முதிர்ந்தோரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே தமிழக அரசு உடனடியாக இந்த பிரச்ச னைகளில் தலையிட்டு சரி செய்ய வேண்டும். தொடர்ச்சியாக இது போன்ற  நிகழ்வுகள் திருச்சி உள்ளிட்ட பல்வேறு  மாவட்டங்களில் நடந்து கொண்டே இருக்கின்றன. எனவே ‘இலவச  பய ணம்தானே’ என்று பெண்களை கொச் சைப்படுத்தும் வகையில் அநாகரிக மாக பேசும் சில ஓட்டுநர் மற்றும் நடத்துநர்  மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை மாதர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்டக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இதுகுறித்து ஜூன் 14 ஆம் தேதி தலைமை போக்குவரத்து மேலாளரி டம் (வணிகம்) மனு கொடுக்கும் போராட் டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ள னர்.

;