districts

img

வியாபாரிகள் சங்க கொடியேற்று விழா

கரூர்,ஜன.2- கரூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்க கொடியேற்று விழா குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு நடைபெற்றது.  விழாவிற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் பி.ஜெக நாதன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்  க.ராஜேந்திரன் வரவேற்றார். சிஐடியு சங்க மாவட்ட பொருளாளர் ப.சரவணன் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்து பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராஜூ,குளித்தலை ஒன்றிய செயலாளர் இரா.முத்துச்செல்வன் ஆகியோர் பேசினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  குளித்தலை நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையோர வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டி தரைக் கடை  வியாபாரிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்க வேண்டும். கூட்டுக் குடும்பம் மற்றும் வாடகை வீட்டில் வசிக்கும் தள்ளுவண்டி, தரைக்கடை வியாபாரி களுக்கு இலவச வீட்டுமனை  வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.