districts

இன்று இலுப்பூர் தியாகி வி.கோவிந்தராஜ் நினைவு நாள்

பண்ணையார்களின் அடக்கு முறைக்கு எதிராக தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராட்டத்தை செங்கொடி இயக்கம் நடத்திக் கொண்டிருந்த காலம் .ஒருபுறம் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையின் மேம்பாட்டிற்காகவும் ,கூலித் தொழிலா ளர்களின் கூலி உயர்வுக்காகவும் வீரம் செறிந்த போராட்டங்களை பண்ணை முதலாளி களை எதிர்த்து நடத்திய காலம் அது. கீழத் தஞ்சை மாவட்டத்தில் மயிலாடு துறை தாலுக்கா இலுப்பூர் ,திருக்கடையூர் ஆக்கூர், மண்மலை, மணல்மேடு உள்ளிட்ட  நூற்றுக்கணக்கான கிராமங்களில் விவ சாய கூலித் தொழிலாளிகள் கூலி உயர்வுக் கான போராட்டத்தை நடத்திவந்தனர். க டுமையான அடக்குமுறையை மேற் கொண்ட பண்ணை முதலாளிகள் காவல்து றையின் உதவியோடு தொழிலாளர்களு டைய கோரிக்கையை நிராகரித்தனர். அத னால் போராட்டங்கள் தீவிரமாயின. பண்ணையார்கள் பல்வேறு அடக்கு முறைகளை ஏவி விட்டனர். வெளி மாவட்டங் களில் இருந்து அடியாட்கள் இறக்கப்பட்ட னர். அவர்களை வைத்து கூலி தொழிலா ளர்கள் மிரட்டப்பட்டனர். கூலி தொழிலாளர் களுக்கு ஆதரவாக போராடிய கம்யூனிஸ்ட்  தலைவர்கள் மிரட்டப்பட்டனர். தலைவர்க ளுடைய உயிருக்கு விலை வைத்தனர். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஏற்றுக் கொண்ட கொள்கையில் சாதாரண  உழைப்பாளி மக்களுக்கு கூலி உயர்வை  பெற்று தருவதில் முனைப்பு காட்டினார்கள்  தலைவர்கள்.

பண்ணையடிமைகளாக...
இக்காலத்தில் ஆக்கூர் மண்மலை பண்ணை, பூந்தாழைபண்ணை, திருக் கடையூர் பிச்சை கட்டளை எஸ்டேட் பண்ணை, ஈச்சங்குடி பண்ணை, நீலவேலி சாமியார் பண்ணை உள்ளிட்ட பண்ணை யார்களிடம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் குவிந்து கிடந்தது. இதில் காலங் காலமாக பண்ணை வேலை செய்த கூலித் தொழிலாளிகள் பண்ணை அடிமை களாகவே வாழ்ந்தனர். இவர்களுக்கு என்று எந்தவித உரிமையும் இல்லை. தினந்தோ றும் காலை வேலைக்கு சென்று மாலை இரவு வரை கட்டாயமாக வேலை செய்ய வேண்டும். ஆனால் கூலியை பற்றி எதுவும் பேசக்கூடாது. பண்ணையார்கள் கொடுப் பதை வாங்கிக் கொண்டு வாய்மூடி மௌனி யாக வாழ்க்கையை நடத்திய காலம். இக்காலத்தில்தான் செங்கொடி இயக்கத் தின் சார்பில் கூலி உயர்வுக்கான போராட்டங் கள் இப்பகுதி முழுவதும் பரவின. இச்சமயத்தில் இலுப்பூர், சங்கரன் பந்தல், ஓலக்குடி, அரசிலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் கூலி கேட்டு போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. குறிப்பாக கூலி உயர்வு குறித்து பேச்சுவார்த்தைகள் அறு வடைக் காலங்களில் துவங்குவது வழக்கம். அதேபோன்றுதான் இக்காலத்தில் கூலியை உயர்வு கோரிக்கையை தொழிலாளர்கள் சார்பாக செங்கொடி இயக்கம் முன்வைத் தது. இந்த பகுதியில் உள்ள பண்ணை யார்கள், நிலச்சுவான்தார்கள், நில உடை மையாளர்கள் சங்கத்தின் சார்பாக கூலியை உயர்த்தி கொடுக்க முடியாது என்று மறுத்த னர். அதன் காரணமாக அறுவடைக்குச் செல்லாமல் வேலைநிறுத்தம் செய்து போராட்டத்தை நடத்தி வந்தார்கள். பேச்சு வார்த்தைகள் ஏதும் துவங்கப்படவில்லை. காலம் கடந்து செல்லச் செல்ல அறுவடை செய்வதற்கு வெளியூர்களில் இருந்து ஆட்களை இறக்குமதி செய்தார்கள். அதையும் எதிர்த்து கம்யூனிஸ்டுகள் செங்கொடி இயக்கம் களம் கண்டது.

முதலாளிகளின் கோரத் தாண்டவம்
ஒரு கட்டத்திற்கு மேலாக பேச்சு வார்த்தையை துவங்க வேண்டிய அவசி யம் ஏற்பட்டது அப்போது முதலாளிகள் சார்பாகவும் தொழிலாளிகள் சார்பாகவும் அரசன்குடி என்ற கிராமத்தில் பேச்சு வார்த்தை நடத்துவது என்று முடிவு செய்தார் கள். தொழிலாளர்கள் சார்பாக செங்கொடி இயக்கத் தலைவர்கள் டி.கே.பழனிவேல், ராசய்யன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டார்கள். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. ஆனால், இதற்கு முன்பா கவே திட்டமிட்டு பண்ணையார்கள் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரவுடிகளை யும் அடியாட்களையும் வரவழைத்திருந்த னர். அவர்களை வைத்து மிரட்டிப் பணிய வைப்பதற்கான எல்லா ஏற்பாட்டையும் செய்து வந்தார்கள். இந்நிலையில் திடீரென்று இலுப்பூர் வடக்குத் தெருவில் வெளியூர் அடியாட்கள் தாக்குதலைத் தொடுத்தார்கள். அப்போது கிராமத்தில் ஆண்கள் எவருமில்லை. பெண்களும் குழந்தைகளும் மட்டுமே இருந்தார்கள். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பண்ணை முதலா ளிகள், அவர்களை தாக்கியதோடு மட்டு மல்லாமல் தலித் மக்கள் குடியிருந்த குடிசை களை தீ வைத்துக் கொளுத்தினார்கள். குடிசைகள் எரிவதை அறிந்த கேள்விப் பட்ட அக்கம் பக்கத்தில் இருந்த தொழிலா ளர்கள் ஓடி வருவதற்குள், 40-க்கும் மேற்பட்ட குடிசைகளும் பொருட்களும் எரிந்து சாம்பலாகின. துணிமணிகள் உள்ளிட்ட அனைத்தும் தீயில் எரிந்த நிலையில் நிர்க்கதியாக செய்வதறியாமல் நின்றனர் தலித் மக்கள். முதலாளிகளின் வெறியாட்டத்தால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சி யளித்தது. காவல்துறை குவிக்கப்பட்டது. காவல் துறையும் அடியாட்களும் சேர்ந்து கொண்டு அப்பகுதி மக்களை அச்சுறுத்தி னார்கள். அப்போது அங்கு என்ன நடந்தது என்று தெரியாமல், 1983 பிப்ரவரி 8 அன்று வெளியூர் சென்று திரும்பி வந்த இலுப்பூரை சேர்ந்த கூலித் தொழிலாளி கோவிந்தராஜ், வெளியூர் அடியாட்கள், காவல்துறை உதவி யோடு ஈட்டியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கான காரணம் கூலியை உயர்த்திக் கேட்டதுதான்.

பொய் வழக்கு புனைந்த காவல்துறை
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை, பாதிக்கப்பட்ட மக்கள் மீதே பொய் வழக்கு போட்டது. பண்ணையார் களின் அடக்குமுறைக்கு ஆதரவாக காவல் துறையும் அரசும் செயல்பட்டது. இவற்றை எதிர்த்து களம் கண்டவர்கள் கம்யூனிஸ்டு கள். இறுதியாக வழக்கு விசாரணையில் முதலாளிகளுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றவாளிகளாக கூலி கேட்டுப் போராடிய, வீடு வாசலை இழந்து, நிர்க்கதியா நின்ற அப்பாவி தலித் மக்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. மேல்முறை யீட்டில் தொழிலாளிகள் அனைவரும் குற்ற மற்றவர்கள் என்றும் முதலாளிகளே குற்ற வாளிகள் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இன்று கூலி நிர்ணயம் என்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இவைகளுக்கெல்லாம் முத்தாய்ப்பாக அமைந்தது செங்கொடி இயக்க கூலித் தொழிலாளர்களின் போராட்டம். வெண்மணியில் 44 உயிர்கள், திரு மெய்ஞானத்தில் இரண்டு உயிர்கள், இலுப்பூரில் கோவிந்தராஜ் என மாவட்டம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலைக்காகவும் கூலி உயர்வுக்காகவும் பல்வேறு தியாகங்களை, உயிர்ப்பலி களை கொடுத்து பெற்றுத் தந்த உரிமை களைப் பாதுகாத்திட ஆண்டுதோறும் தியாகிகள் தினம் நினைவு கூரப்படு கின்றது. அவர்களின் தியாகத்தைப் போற்று வோம்...


கட்டுரையாளர்
ஏ.ரவிச்சந்திரன்,
சிபிஎம் மயிலாடுதுறை மாவட்ட செயற்குழு உறுப்பினர், தரங்கம்பாடி ஒன்றிய செயலாளர்.

;